• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • தோனியை சந்திக்க 1,400 கி.மீ நடந்தே சென்றே ரசிகர்!

தோனியை சந்திக்க 1,400 கி.மீ நடந்தே சென்றே ரசிகர்!

தோனி

தோனி

தோனி ரசிகர்கள் ஒருவர் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது

  • Share this:
மிஸ்டர் கூல் என கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும்  எம்.எஸ்.தோனிக்கு எண்ணற்ற ரசிகர்கள் கூட்டம் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. கடந்தாண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி கூறி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடைப்பெற்றார் இந்திய கிரிக்கெட்டின் நாயகன் மகேந்திர சிங் தோனி.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இந்தியன் பிரீமியர் லீக் 2021-ன் 14வது சீசனில் இதுவரை நடந்துள்ள போட்டிகளில் சிஎஸ்கே அணி அட்டகாசமாக விளையாடி புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.  இதனிடையே கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகல் கடந்த மே மாதம்  தள்ளி வைக்கப்பட்டது.

Also Read:  இங்கிலாந்துக்கு சேவாக் ‘நச்’ அட்வைஸ்- லார்ட்ஸ் வெற்றியைக் கொண்டாடும் லெஜண்ட்கள்

தோனி ஓய்வு பெற்று தற்போது ஓராண்டுகளை கடந்துள்ள நிலையிலும் அவரது ரசிகர்களின் அன்பு நாளைக்கு நாள் அதிகரித்து வருகிறது தோனியின் ரசிகர்கள் அவருக்காக பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் தோனி ரசிகர்கள் ஒருவர் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

எம்.எஸ்.தோனியை சந்திக்க ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள ஜலான் கெடா கிராமத்தை சேர்ந்த 18 வயதான அஜய் கில் என்ற இளைஞர் ஒருவர் அவரது ஊரில் இருந்து சுமார் 1,400 கிமீ தொலைவில் உள்ள ராஞ்சிக்கு நடந்தே சென்றுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமையன்று ராஞ்சியின் புறநகரில் சிமாலியாவில் உள்ள எம்எஸ் தோனியின் பண்ணை வீட்டு வாயிலுக்கு வெளியே காத்திருந்துள்ளார்.மேலும் அவர் தலையில் எம்எஸ் தோனியின் பெயரை ஹேர் ஸ்டைலாக செய்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது, அவர் முடிதிருத்தும் வேலை செய்து வருவதாகவும், தோனியின் தீவிர ரசிகர் என்பதால் அவரை நேரில் காண நடந்தே வந்ததாக தெரிவித்துள்ளார். தோனி குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் அவருக்காக ஒதுக்குவார் என்ற நம்பிக்கையில் ஜூலை 29 கிளம்பி 16 நாட்கள் நடந்து வந்ததாக அவர் தெரிவித்தார்.நீண்ட சிரமங்களுக்கு இடையேயும் அஜய், தோனியின் வீட்டை அடைந்துவிட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக தோனி அங்கு இல்லை. அவர் வெளியில் சென்றிருப்பதால் தோனி திரும்பி வீட்டிற்கு வர 3 மாத காலம் ஆகும் என அங்கு இருந்தவர்கள் அஜய் கில்லை சமாதானம் செய்தனர்.

Also Read: கபில்தேவை விஞ்சிய மொகமட் சிராஜ்; இங்கிலாந்தில் 7 பேர் டக் அவுட்- லார்ட்ஸ் சுவாரசியங்கள்

ஆனாலும் தோனி தனது கனவில் வந்து தன்னை சந்திக்க வா என்று என்று கூறியதாகவும், அவர் திரும்பி வரும்வரை பொறுத்திருந்து அவரை பார்த்துவிட்டு தான் ஊர் திரும்புவேன் என அஜய் கில் கூறவே, அங்கிருந்த தோனி ரசிகர்கள் அவரை சமாதானப்படுத்தி விமானத்திற்கு டிக்கெட்டும் போட்டு கொடுத்து வழி அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தோனி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: