ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஐ.பி.எல் தொடரில் இருந்து  ஓய்வை அறிவிக்கும் தோனி? ஃபேஸ்புக் பதிவால் பரபரப்பு

ஐ.பி.எல் தொடரில் இருந்து  ஓய்வை அறிவிக்கும் தோனி? ஃபேஸ்புக் பதிவால் பரபரப்பு

தோனி

தோனி

சினிமாத்துறையில் தோனி நுழையப்போவதாக சமீபத்தில் தகவல்கள் பரவின. அதுதொடர்பாக ஏதேனும் அறிவிப்பை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஐ.பி.எல். உள்பட அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தோனி ஓய்வை அறிவிக்கப் போகிறாரா என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தோனியின் ஃபேஸ்புக் பதிவு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

  தோனி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நாளை மதியம் 2 மணிக்கு நேரலையில் வரப்போவதாக கூறியுள்ளார். அப்போது, ரசிகர்களுடன் மிக முக்கியமான தகவலை பகிர்ந்து கொள்ளப் போவதாக தோனி தெரிவித்திருக்கிறார்.

  அநேகமாக ஐ.பி.எல். உள்பட அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தோனி ஓய்வை அறிவிப்பார் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.  41 வயதாகும் தோனி கடந்த 2020 ஆகஸ்ட் 15 , சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

  கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்த இந்திய அணி!!..

  இதன்பின்னர் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் தோனி தொடர்ந்து விளையாடி வருகிறார். தற்போது தோனியின் ஃபேஸ்புக் பதிவு ரசிகர்களை பல்வேறு விதமாக யோசிக்க வைத்துள்ளது. சினிமாத்துறையில் தோனி நுழையப்போவதாக சமீபத்தில் தகவல்கள் பரவின. அதுதொடர்பாக ஏதேனும் அறிவிப்பை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.

  சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியை தோனி நேரில் கண்டு ரசித்தார். பொது நிகழ்ச்சியில் அவர் இடம்பெற்ற கடைசி நிகழ்வு இதுவாகும்.

  பெரிய போட்டிகளில் நாம் சிறப்பாக ஆடுவதில்லை : கங்குலி கவலை

  தோனியின் தலைமையின் கீழ் இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2007-ல் நடந்த டி20 உலகக்கோப்பை, 2011-ல் நடைபெற்ற உலகக்கோப்பை  ஒருநாள் கிரிக்கெட்தொடர், 2013-ல் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

  Published by:Musthak
  First published:

  Tags: Dhoni