ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஐபிஎல் தொடரில் ஓய்வு முடிவை அறிவிக்கும் தோனி? - அதிர்ச்சியுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!

ஐபிஎல் தொடரில் ஓய்வு முடிவை அறிவிக்கும் தோனி? - அதிர்ச்சியுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!

மகேந்திர சிங் தோனி

மகேந்திர சிங் தோனி

தோனி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று மதியம் 2 மணிக்கு நேரலையில் வரப்போவதாக கூறியுள்ளார். அப்போது, ரசிகர்களுடன் மிக முக்கியமான தகவலை பகிர்ந்து கொள்ளப் போவதாக தோனி தெரிவித்திருக்கிறார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தோனி இன்று மதியம் 2 மணியளவில் பேஸ்புக் நேரலையில் தோன்றுவதாகவும், அதில் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடப்படப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

  ஐ.பி.எல். உள்பட அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தோனி ஓய்வை அறிவிக்கப் போகிறாரா என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தோனியின் ஃபேஸ்புக் பதிவு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

  தோனி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று மதியம் 2 மணிக்கு நேரலையில் வரப்போவதாக கூறியுள்ளார். அப்போது, ரசிகர்களுடன் மிக முக்கியமான தகவலை பகிர்ந்து கொள்ளப் போவதாக தோனி தெரிவித்திருக்கிறார்.

  அநேகமாக ஐ.பி.எல். உள்பட அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தோனி ஓய்வை அறிவிப்பார் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.  41 வயதாகும் தோனி கடந்த 2020 ஆகஸ்ட் 15 , சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

  இதன்பின்னர் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் தோனி தொடர்ந்து விளையாடி வருகிறார். தற்போது தோனியின் ஃபேஸ்புக் பதிவு ரசிகர்களை பல்வேறு விதமாக யோசிக்க வைத்துள்ளது. சினிமாத்துறையில் தோனி நுழையப்போவதாக சமீபத்தில் தகவல்கள் பரவின. அதுதொடர்பாக ஏதேனும் அறிவிப்பை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Cricket, Dhoni, Facebook, Live, MS Dhoni