₹1800 சந்தா காரணமாக தோனிக்கு ஏற்பட்ட சிக்கல்... நடந்தது என்ன?

தோனி ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்தில் வாழ்நாள் உறுப்பினராக கடந்த 2019-ம் ஆண்டு இணைந்தார்.

₹1800 சந்தா காரணமாக தோனிக்கு ஏற்பட்ட சிக்கல்... நடந்தது என்ன?
மகேந்திர சிங் தோனி
  • Share this:
மகேந்திர சிங் தோனி கட்ட வேண்டிய ரூ.1800 சந்தா விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாக ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கம் விளக்கமளித்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்தில் வாழ்நாள் உறுப்பினராக கடந்த 2019-ம் ஆண்டு இணைந்தார். வாழ்நாள் உறுப்பினராக இணைய தோனி கட்ட வேண்டிய சந்தா பணம் பத்தாயிரம் ரூபாயை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

ஆனால் இதற்கான ஜி.எஸ்.டி தொகை 1800 ரூபாயை பெற்றுக் கொள்ள அவர்கள் தவறிவிட்டனர். இந்த தகவல் தற்போது வெளியாகி தோனி ரூ.1800  சந்தா கட்டவில்லை என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து தோனி ரசிகர்கள் சிலர் அந்த சந்தாவை கட்ட ஜார்கண்ட கிரிக்கெட் சங்கத்திற்கு சென்றனர்.


ஆனால் அந்த பணத்தை பெற்றுக் கொள்ள ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கம் மறுப்பு தெரவித்தது. இது தொடர்பாக விளக்கமிளத்த ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கத்தின் செயலளார் சஞ்சய் சாஹே, “தோனி சந்தா விவகாரம் முடிந்துவிட்டது. மீதி சந்தா தொகை கட்டப்பட்டுவிட்டது“ என்றார்.மேலும், “கிரிக்கெட் சங்கத்தின் கணக்கை சரிபார்க்கும் போது தான் இந்த விவகாரம் தெரிய வந்தது. இது எங்களுடைய தவறுதான். தற்போது பாக்கி தொகை செலுத்தப்பட்டுவிட்டது. இது தொடர்பாக விவாதிக்க வேற ஏதுவும் இல்லை“ என்றார்.
First published: September 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading