• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பெங்களூருவில் ‘தோனி கிரிக்கெட் அகாடமி’

பெங்களூருவில் ‘தோனி கிரிக்கெட் அகாடமி’

தோனி

தோனி

ஒருங்கிணைந்த அணுகுமுறை, நேர்மை, டீம் வொர்க், கிரிக்கெட்டை மகிழ்வுடன் ஆடுவது, தொழில்நேர்த்தி, மற்றும் தகவமைத்துக் கொள்ளல் போன்ற அடிப்படைகளுடன் இந்த பயிற்சி அகாடமி செயல்படவுள்ளது என்கின்றனர் இந்த ஸ்போர்ட்ஸ் நிறுவன தலைவர்கள்.

  • Share this:
    ஸ்போர்ட்ஸ் நிறுவனங்களான கேம் பிளே மற்றும் ஆர்க்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெங்களூருவில் தோனி கிரிக்கெட் அகாடமி தொடக்கத்தை அறிமுகம் செய்தனர்.

    அதாவது எம்.எஸ். தோனி கிரிக்கெட் அகாடமி MSDCA என்று இது அழைக்கப்படுகிறது. இந்த அகாடமி பிதரஹள்ளியில் உள்ள கதா அக்ரஹாரத்தில் நவம்பர் 7 முதல் செயல்படத் தொடங்கவுள்ளது. இப்போது இதில் சேர பதிவு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கி விட்டன. கேம் பிளே நிறுவனத்தின் தீபக் எஸ்.பட்னாகர் கூறும்போது விளையாட்டில் பெரிய அளவில் வரும் கனவு கொண்ட குழந்தைகள் இதில் சேரலாம் என்றார்

    “பெங்களூருவில் எம்.எஸ்.தோனி கிரிக்கெட் அகாடமியை தொடங்கியதன் மூலம் கிரிக்கெட்டில் பெரிய அளவில் வரவேண்டும் என்ற ஆசைக் கொண்ட குழந்தைகளுக்கு நாட்டிலேயே மிக அருமையான உள்கட்டமைப்பு வசதிகளை இந்த அகாடமியில் செய்து கொடுத்துள்ளோம். உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வசதிகள் ஆகியவை மூலம் தங்கள் கனவுகளை அவர்கள் பின் தொடரலாம்” என்றார் தீபக் பட்னாகர்.

    இதன் மூலம் குழந்தைகளுக்கு நவீன பயிற்சி வசதிகள் கிடைக்கும் பிசிசிஐ அங்கீகாரம் பெற்ற பெரிய பயிற்சியாளர்கள் இந்தக் குழுவில் உள்ளனர். எம்.ஆர்.எப் கோச்சிங் அகாடமி எப்படி பவுலர்களை உற்பத்தி செய்து வருகிறதோ அதே போல் இந்த எம்.எஸ்.தோனி கிரிக்கெட் அகாடமி பலதரப்பட்ட திறமை கொண்ட கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒருங்கிணைந்த அணுகுமுறை, நேர்மை, டீம் வொர்க், கிரிக்கெட்டை மகிழ்வுடன் ஆடுவது, தொழில்நேர்த்தி, மற்றும் தகவமைத்துக் கொள்ளல் போன்ற அடிப்படைகளுடன் இந்த பயிற்சி அகாடமி செயல்படவுள்ளது என்கின்றனர் இந்த ஸ்போர்ட்ஸ் நிறுவன தலைவர்கள்.

    பெங்களூருவில் ஏற்கெனவே தேசிய கிரிக்கெட் அகாடமி உள்ளது, அதோடு சேர்த்து இப்போது எம்.எஸ்.தோனி கிரிக்கெட் அகாடமியும் இந்திய கிரிக்கெட்டுக்குப் பங்களிப்புச் செய்யவுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: