ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

VIDEO | 'ஒத்த சொல்லால' பாடலுக்கு நடனமாடிய தோனியின் மகள் ஸிவா..!

VIDEO | 'ஒத்த சொல்லால' பாடலுக்கு நடனமாடிய தோனியின் மகள் ஸிவா..!

தோனியின் மகள் ஸிவா நடனம்.

தோனியின் மகள் ஸிவா நடனம்.

#MSDhoni Daughter #Ziva Dance For #OthaSollaala Tamil Song | சென்னையில் நடந்த போட்டியைக் காண தோனியின் மனைவி சாக்‌ஷி மற்றும் மகள் ஸிவா ஆகியோர் மைதானத்துக்கு வந்திருந்தனர்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனியின் செல்ல மகள் ஸிவா, ஒத்த சொல்லால என்ற தமிழ் பாடலுக்கு நடனமாடும் வீடியோ வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது.

  ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் கடந்த 23-ம் தேதி சென்னையில் தொடங்கியது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த தொடக்க போட்டியில் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

  CSK Team
  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி.(CSK)

  இந்தப் போட்டியைக் காண்பதற்காக தோனியின் மனைவி சாக்‌ஷி மற்றும் மகள் ஸிவா ஆகியோர் மைதானத்துக்கு வந்திருந்தனர்.

  போட்டியின் இடையே மைதானத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தில் இருந்து ஒத்த சொல்லால பாடல் ஒலிப்பரப்பு செய்யப்பட்டது. இந்த பாடலைக் கேட்டதும் தோனியின் செல்ல மகள் ஸிவா, தன்னை அறியாமல் எழுந்து ஆடத்தொடங்கினார். இந்த வீடியோவை தற்போது ட்விட்டரில் வெளியாகியுள்ளது.

  ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவான இந்தப் பாடலுக்கு ஸிவா ஆடி வீடியோவை அவரது ரசிகர்கள் குழு பகிர்ந்துள்ளனர். இந்தப் பதிவுக்கு ஜி.வி.பிரகாஷ் லைக் கொடுத்துள்ளார். தோனியின் மகள் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

  VIDEO: உன்னோட பிளான் என்கிட்ட நடக்காது... கேதர் ஜாதவை கலாய்த்த தோனி...!

  ஃபிஞ்ச் அதிரடியில் வீழ்ந்த பாகிஸ்தான் அணி!

  தோனியின் 6 ஆண்டுகள் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

  இமாலய மைல்கல்லை விரட்டும் சிக்சர் மன்னன் கெய்ல்... இன்னும் 6 ரன்கள்தான் தேவை!

  Also Watch...

  Published by:Murugesan L
  First published:

  Tags: IPL 2019, Ziva Dhoni