மகேந்திர சிங் தோனி தனது மனைவி சாக்ஷியுடன் நடனமாடி புத்தாண்டை கொண்டாடிய வீடியோ வெளியாகி உள்ளது.
பிரபலங்கள் பலர் புத்தாண்டு கொண்டாடிய வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன் புத்தாண்டு கொண்டாடும் புகைப்படத்தை சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
புத்தாண்டு இரவு பார்டியின் போது சாக்ஷி மகேந்திர சிங் தோனியுடன் உற்சாகமாக நடனமாடும் வீடியோவும் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது. தோனிக்கு பார்ட்டியில் கலந்து கொண்ட மற்றவர்களும் தோனி கட்டியணைத்தும் தனது புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்தனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி உலகக் கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் இடம் பெறாமல் உள்ளார். ஐ.பி.எல் தொடருக்கு பின் அவர் மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.