விரைவில் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் மகேந்திர சிங் தோனி?

மகேந்திர சிங் தோனி ஆன்லைன் மூலமாக கிரிக்கெட் பயிற்சி மையம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விரைவில் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் மகேந்திர சிங் தோனி?
மகேந்திர சிங் தோனி
  • Share this:
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வரும் ஜூலை 2-ம் தேதி முதல் ஆன்லைனில் வீரர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தோனியுடன் இணைந்து ஆர்கா ஸ்போர்ட் நிறுவனம் இந்த பயிற்சி மையத்தினை நிறுவ உள்ளதாக மும்பை மிரர் தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், “நாங்கள் இந்த நடைமுறையில் ஏற்கனவே 200 பயிற்சியாளர்களுக்கு பயிற்சியளித்துள்ளோம். அவர்கள் இதன் மூலம் நல்ல பயனடைந்துள்ளார்கள். வரும் ஜூலை 2-ம் தேதியிலிருந்து வீரர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். இந்த பயிற்சி மையத்திற்கு தோனி தலைமை ஏற்பார். வீரர்களும், பயிற்சியாளர்களும் அவர் வழிநடத்துவார்“ என்றனர்.


மேலும் இந்த திட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் சர்வதேச வீரர் டேரில் குல்லினனும் அடங்குவார். அவர் பயிற்சி மையத்தின் இயக்குனராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகேந்திர சிங் தோனி 2019 உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு பின் இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்தார். ஐ.பி.எல் தொடரில் தோனியின் ஆட்டத்தை பொறுத்து இந்திய அணியில் இடம்பெறுவார் என்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஐ.பி.எல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்கள் தோனி கிரிக்கெட் விளையாடமல் இருப்பதால் அவர் பயிற்சியாளராக நேரத்தை செலவிடலாம் என்று திட்டமிள்ளதாக கூறப்படுகிறது.
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading