Video: ஸ்டம்புகள் தெறிக்க போல்டான தோனி... இந்திய ரசிகர்கள் ஏமாற்றம்!

#MSDhoni cleaned up by an absolute ripper from #TrentBoult | கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, இந்திய அணி 252 ரன்கள் சேர்த்து.

Video: ஸ்டம்புகள் தெறிக்க போல்டான தோனி... இந்திய ரசிகர்கள் ஏமாற்றம்!
போல்டாகி வெளியேறும் தோனி. (ICC)
  • News18
  • Last Updated: February 3, 2019, 1:01 PM IST
  • Share this:
நியூசிலாந்துக்கு எதிரான 5-வது ஒரு நாள் போட்டியில் ஸ்டம்புகள் தெறிக்க ஒரு ரன்னில் தோனி ஆட்டமிழந்ததால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

வெலிங்டனில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். காயம் காரணமாக 4-வது போட்டியில் களமிறங்காத விக்கெட் கீப்பர் தோனி மீண்டும் அணிக்கு சேர்க்கப்பட்டது உள்ளிட்ட 3 மாற்றங்கள் செய்யப்பட்டன.

இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் ரோகித் சர்மா (2), தவான் (6) , ஷுப்மன் கில் (7) என முதல் வரிசை வீரர்கள் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். பின்னர் வந்த அம்பதி ராயுடு (90), விஜங் சங்கர் (45) ஆகியோரின் ஆட்டத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது.


Ambati Rayudu, Vijay Shankar, அம்பதி ராயுடு, விஜய் சங்கர்
அம்பதி ராயுடு மற்றும் விஜய் சங்கர். (BCCI)


கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, இந்திய அணி 252 ரன்கள் சேர்த்து. இதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விக்கெட் கீப்பர் தோனி ஒரே ஒரு ரன்னில் ஸ்டம்புகள் தெறிக்க போல்டானார். டிரென்ட் போல்ட் வீசிய ஆட்டத்தின் 10-வது ஓவரின் 3-வது பந்தில் தோனி ஆட்டமிழந்தார்.



இந்திய அணி தடுமாறிய நேரத்தில், காப்பாற்ற வேண்டிய மூத்த வீரரே, இப்படி ஆட்டமிழந்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.

#NZvIND ராயுடு, வி.சங்கர், பாண்டியா அசத்தல்: நியூசி.க்கு இந்தியா 253 ரன்கள் இலக்கு!

Also Watch...

First published: February 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்