ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

மகள் ஜிவாவுடன் புத்தாண்டை கொண்டாடிய தோனி… மனைவி சாக்ஷியின் வீடியோ வைரல்

மகள் ஜிவாவுடன் புத்தாண்டை கொண்டாடிய தோனி… மனைவி சாக்ஷியின் வீடியோ வைரல்

மகள் ஜிவாவுடன் தோனி

மகள் ஜிவாவுடன் தோனி

இன்ஸ்டாகிராமில் தோனியை 40 மில்லியனுக்கும் அதிகமானோரும், ட்விட்டரில் 8.5 மில்லியன் பேரும் பின் தொடர்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மகள் ஜிவாவுடன் மகேந்திர சிங் தோனி புத்தாண்டை குதூகலமாக கொண்டாடியுள்ளார். இதுதொடர்பாக அவரது மனைவி சாக்ஷி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ வைரலாகியுள்ளது. வான வேடிக்கைகளைப் பார்த்தவாறே வீடியோவில் தனது மகள் ஜிவாவை கொஞ்சி மகிழ்கிறார் தோனி. இந்த வீடியோவுக்கு ஹேப்பி நியூ இயர் 2023 என்று தலைப்பிட்டு சாக்ஷி தோனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு தோனியின் ரசிகர்கள் லைக்ஸ்களையும், கமென்ட்டுகளையும் குவித்து வருகின்றனர்.

தனது மகளை மகிழ்ச்சிப்படுத்தி தந்தையாகவும் தோனி முன் மாதிரியாக இருக்கிறார் என்று ரசிகர்கள் கமென்ட்டில் கூறியுள்ளனர். சமீபத்தில் ஜிவா தோனிக்கு லியோனல் மெஸ்ஸி ஆட்டோகிராஃப் அளித்த டி ஷர்ட் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதனைப் பதிவிட்ட சாக்ஷி தோனி, தந்தையைப் போன்று மகள் என்று அந்த பதிவுக்கு தலைப்பிட்டிருந்தார்.

இந்த இரு பதிவுகளுக்கு முன்பாக ரிஷப் பந்த் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்த துபாயில் எடுக்கப்பட்ட படத்தை சாக்ஷி பதிவிட்டிருந்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி கடந்த 2020 ஆகஸ்ட் 15ஆம் தேதி ஓய்வு பெற்று விட்டார். இருப்பினும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அவர் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார்.
 
View this post on Instagram

 

A post shared by Sakshi Singh (@sakshisingh_r)சோஷியல் மீடியாவில் தோனி இருந்தாலும், மிக மிக குறைவான பதிவுகளை மட்டுமே அவர் போஸ்ட் செய்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் தோனியை 40 மில்லியனுக்கும் அதிகமானோரும், ட்விட்டரில் 8.5 மில்லியன் பேரும் பின் தொடர்கின்றனர்.

உலகக்கோப்பைக்கான இந்திய அணி குறித்து பிசிசிஐ ஆலோசனை… ஐபிஎல் தொடரை சில வீரர்கள் தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி தற்போது செயல்பட்டு வருகிறார். இந்த அணியில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஏலத்தின் மூலம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் இந்திய அணி… 20 வீரர்கள் அடங்கிய பட்டியல் ரெடி…

விரைவில் தொடங்கவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மீண்டும் சென்னை அணியை தோனி சாம்பியன் ஆக்குவார் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.

First published:

Tags: Dhoni, New Year 2023, Ziva Dhoni