நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராஞ்சியில் மகேந்திர சிங் தோனி, தனது மனைவி சாக்ஷி மற்றும் குடும்பத்துடன் வாக்களித்தார்.
நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், 5-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
7 மாநிலங்களில் உள்ள 51 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி, சோனியா காந்தி போட்டியிடும் ரே பரேலி ஆகிய தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. காலை முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களிக்க காத்திருக்கின்றனர்.

வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள்.
பதற்றமுள்ள வாக்குச்சாவடி என்று அறியப்பட்டுள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி, தனது மனைவி சாக்ஷி மற்றும் குடும்பத்துடன் வாக்களித்தார்.
ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள ஜவஹர் வித்யா மந்திர் வாக்குச்சாவடியில் தோனி வாக்களித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
VIDEO: பேட்டை தோளில் போட்டு தலாட்டிய ரோகித்... ஏன் தெரியுமா?
சி.எஸ்.கே அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்? சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி!
ஐபிஎல்-ல வேலை முடிஞ்சது... அதனால இப்ப சினிமா... - ஆண்ட்ரு ரசல் அதிரடி பிளான்
Video: ஜூனியர் இம்ரான் தாஹிர் ரெடி!
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.