தோனி பிறந்தநாள் - உணர்ச்சி பொங்க பாடலை பரிசளித்த பிராவோ

MS Dhoni | தோனியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான பிராவோ, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பாடல் ஒன்றை பாடி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

தோனி பிறந்தநாள் - உணர்ச்சி பொங்க பாடலை பரிசளித்த பிராவோ
தோனிக்கு பிறந்தநாள்: உணர்ச்சி பொங்க பாடலை பரிசளித்த பிராவோ...
  • Share this:
கிரிக்கெட் அரங்கின் "கூல்" என அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி உதித்த தினம் தான் இன்று (ஜூலை 7). ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் தோனிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.

இந்த சூழலில், வெஸ்ட் இண்டீஸ் அணி வீரரும், சிஎஸ்கே அணியில் நம்பிக்கை நட்சத்திரமுமான டுவைன் பிராவோ தோனிக்கு பிறந்தநாள் பரிசாக பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
"Number 7" என தோனியின் ஜெர்சி நம்பரை குறித்து பதிவிட்டுள்ள அந்த பாடலில், தோனி பிறந்த இடம் தொடங்கி, மூன்று வித கோப்பையையும் கைப்பற்றிய வரலாறு வரை அனைத்தையும் நினைவு கூர்ந்து பாடியுள்ளார். மேலும் தோனி தனக்கு சகோதரன் எனவும் பிராவோ உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.




மேலும் படிக்க...

கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் - மத்திய அரசு புதிய உத்தரவுசிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ தோனி - பிராவோவின் ஆழமான உறவை வெளிப்படுத்தும் விதமாக உள்ளதாக ரசிகர்கள் பார்வையில் பார்க்கப்படுகிறது.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading