கோப்பையை இழந்த போதும் புதிய சாதனைப் படைத்த தல 'தோனி'

மும்பை வீரர்கள் டி-காக் மற்றும் ரோகித் சர்மாவை கேட்ச் பிடித்து தோனி அவுட்டாக்கினார்.

கோப்பையை இழந்த போதும் புதிய சாதனைப் படைத்த தல 'தோனி'
மகேந்திரசிங் தோனி
  • News18
  • Last Updated: May 13, 2019, 4:58 PM IST
  • Share this:
ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் சென்னை அணி கோப்பையை வெல்ல முடியாமல் போனது ரசிகர்களிடையே ஏமாற்றமளித்தது. இந்தப் போட்டியில் கேப்டன் தோனி ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

நடப்பு ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைப்பெற்றது. இறுதி போட்டியில் 4வது முறையாக கோப்பையை வெல்ல சென்னை, மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.

பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் கடைசி பந்தில் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கோப்பையை 4முறை வென்ற பெருமையை மும்பை அணி தக்க வைத்துக் கொண்டது.


கோப்பையை வென்ற உற்சாகத்தில் மும்பை அணி


நேற்றைய இறுதிப்போட்டியில் கேப்டன் தோனி விக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனை படைத்துள்ளார். மும்பை வீரர்கள் டி-காக் மற்றும் ரோகித் சர்மாவை கேட்ச் பிடித்து தோனி அவுட்டாக்கினார். இதன் மூலம் ஐ.பி.எல் தொடரில் விக்கெட் கீப்பராக அதிக வீரர்களை வெளியேற்றிய சாதனையை அவர் படைத்துள்ளார்.

Also Watch : கோப்பையை மாத்தி மாத்தி நாங்களே வச்சிக்கிறோம் - தோனி

ஐ.பி.எல் தொடரில் தோனி 190 போட்டியில் 94 கேட்ச், 38 ஸ்டம்பிங் என மொத்தம் 132 வீரர்களை அவுட் செய்துள்ளார். இதற்கு அடுத்தப்படியாக தினேஷ் கார்த்தி 101 கேட்ச், 30 ஸ்டெம்பிங் என மொத்தம் 131 வீரர்களை அவுட் செய்துள்ளார். இவர்களுக்கு அடுத்தப்படியாக ராபின் உத்தப்பா(90), பர்த்தீவ் படேல்(82) ஆகியோர் உள்ளனர்.
Also Read: தோனி அவுட்டே இல்லை - வைரலாகும் சிறுவன் அழும் வீடியோ

Also Watch

First published: May 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்