• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • தோனி குறித்து சுரேஷ் ரெய்னா மனைவி பிரியங்கா வெளியிட்ட ரகசியம்!

தோனி குறித்து சுரேஷ் ரெய்னா மனைவி பிரியங்கா வெளியிட்ட ரகசியம்!

Sakshi dhoni

Sakshi dhoni

தோனிக்கு இரண்டாவது குழந்தை அடுத்த ஆண்டு பிறக்க இருப்பதாக தகவல் வெளியாகி, சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

  • Share this:
தோனி - சாக்‌ஷி தம்பதியர் குறித்து சுரேஷ் ரெய்னாவின் மனைவி பிரியங்கா ரகசியம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனி, தற்போது வெற்றிகரமான ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐ வழிநடத்தி வருகிறார். நேற்றைய தினம் 14வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை தன் வசப்படுத்தியிருக்கிறது தோனி தலைமையிலான படை..

சென்னை அணியின் வெற்றியையும், அதற்கு காரணமாக இருந்ததாக தோனியையும் சென்னை ரசிகர்கள் உச்சானிக் கொம்பில் வைத்து பாராட்டி வருகின்றனர். கடந்த ஐபிஎல் சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறமுடியாமல் சென்னை அணி பரிதாபமாக காட்சியளித்த போது, தோனி அவ்வளவு தான், அவருக்கு வயதாகிவிட்டது, இனிமேல் அவர் எதற்கும் லாயக்கில்லை என்பது போன்ற கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பார்க்க முடிந்தது.

Also Read: நிகாங் சீக்கிய குழுவின் பரபரக்கும் பின்னணி! விவசாயிகள் போராட்ட களத்தில் கொடூர கொலைக்கான காரணம் என்ன?

ஆனால் தோல்வியில் இருந்து மீண்ட சென்னை அணி அடுத்த தொடரில் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் ஆகி இருக்கிறது. மேலும் தன் மீதான விமர்சனங்களுக்கு எப்போதும் போல வார்த்தைகளால் அல்லாமல் செயலில் பதிலளித்திருக்கிறார் கேப்டன் மகேந்திர சிங் தோனி.

இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மட்டுமல்லாது தோனியின் ரசிகர்கள் வேறு ஒன்றிற்காகவும் தோனியை வாழ்த்தி வருகின்றனர். தோனிக்கு இரண்டாவது குழந்தை அடுத்த ஆண்டு பிறக்க இருப்பதாக தகவல் வெளியாகி, சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. தோனிக்கு ஏற்கனவே ஸிவா என்ற மகள் இருக்கும் நிலையில் தோனியின் மனைவி சாக்‌ஷி தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், 2022ம் ஆண்டு அவர்களுக்கு இரண்டாவது குழந்தை பிறக்க இருப்பதாகவும் ரசிகர்கள் இதற்காக தோனியை வாழ்த்தி வருகின்றனர்.

Also Read:  பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கட்சி எம்.பியை தேவாலயத்தில் படுகொலை செய்த தீவிரவாதி!

மேலும், தோனி - சாக்‌ஷி தம்பதியருக்கு இரண்டாவது குழந்தை பிறக்க இருப்பதை, தோனியின் நண்பரும், சக வீரருமான சுரேஷ் ரெய்னாவின் மனைவி பிரியங்காவும் உறுதிப்படுத்தியிருப்பதாக சமூக வலைத்தள தகவல்கள் கூறின.

இது உண்மையா, இல்லையா என இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ரசிகர்கள் தோனி - சாக்‌ஷி தம்பதியருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: