சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தோனி என்றாலே அமைதியின் மறு உருவம், மைதானத்தில் அவரின் அமைதியானர் என்று நாம் அனைவருக்கும் தெரியும் இதனால் தான் அவருக்கு மிஸ்டர் கூல் என்றே ரசிகர்கள் அழைக்கின்றனர்.
தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் புகைப்படம் இணையத்தில் எப்போழுதும் வைரலாக சுற்றி இருக்கும். இந்த நிலையில், துபாயில் நடைபெற்ற பார்ட்டியில் தோனி பங்கேற்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த பார்ட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா, மனைவி சாக்ஷி ஆகியோரும் பங்கேற்றுள்ளது அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
மேலும், பிரபல ராப் பாடகர் பாட்ஷா உடன் தோனியும் பாட்டு பாடுவது, அவரும் இணைந்து நடனமாடுவதும் அவருடன் பாண்டியா சகோதர்கள் மற்றும் இஷான் கிஷான் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும் இடம் பிடித்து இருந்தனர்.
Video of the day is here! 🕺💥@MSDhoni | #MSDhoni | #Dhoni pic.twitter.com/CCj4zOLQjV
— DHONI Era™ 🤩 (@TheDhoniEra) November 27, 2022
பாட்ஷாவுடன் தோனி நடனமாடியது மட்டுமின்றி, தோனியே டிஜே ஆகவும் மாறி பாட்டியில் உற்சாக கொண்டாடினார். இதை அவரது மனைவி சாக்ஷி, இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போட்டிருந்த வீடியோ ஆகும். எப்போழுதும் அமைதியானவராக பார்த்த தோனியை மகிழ்ச்சியாக நடனாமாடும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dubai, Hardik Pandya, MS Dhoni