நரேந்திர மோடி ஸ்டேடியம் ஆனது உலகின் மிகப்பெரிய அகமதாபாத் மொதீரா ஸ்டேடியம்

நரேந்திர மோடி ஸ்டேடியம் ஆனது உலகின் மிகப்பெரிய அகமதாபாத் மொதீரா ஸ்டேடியம்

நரேந்திர மோடி ஸ்டேடியம்.

உலகிலேயே மிகப்பெரிய ஸ்டேடியமான அகமதாபாத்தின் மொதீரா ஸ்டேடியம் இனி நரேந்திர மோடி ஸ்டேடியம் என்று அழைக்கப்படும். இந்தியக் குடியரசுத் தலைவர் அதிகாராபூர்வமாக பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை அகமதாபாத் ஸ்டேடியத்துக்குச் சூட்டியுள்ளார்.

 • Share this:
  உலகிலேயே மிகப்பெரிய ஸ்டேடியமான அகமதாபாத்தின் மொதீரா ஸ்டேடியம் இனி நரேந்திர மோடி ஸ்டேடியம் என்று அழைக்கப்படும். இந்தியக் குடியரசுத் தலைவர் அதிகாராபூர்வமாக பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை அகமதாபாத் ஸ்டேடியத்துக்குச் சூட்டியுள்ளார்.

  உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான இதில் 1,10,000 பேர் அமர்ந்து போட்டிகளைப் பார்க்க முடியும்.

  இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று இன்னும் சிறிது நேரத்தில் 3வது டெஸ்ட் போட்டி இந்த ஸ்டேடியத்தில் தொடங்குகிறது, இந்நிலையில் மொதீரா ஸ்டேடியம் நரேந்திர மோடி ஸ்டேடியம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

  உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சிறப்பு கவுவரவ விருந்தினராக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இங்கு ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் கட்டப்படும், இதன் மூலம் அகமதாபாத் ஸ்போர்ட்ஸ் சிட்டி ஆகும் என்றார் அமித் ஷா.

  “சர்தார் படேல் ஸ்போர்ட்ஸ் என்கிளேவ் மற்றும் நரேந்திர மோடி ஸ்டேடியம் ஆகியவற்றுடன் நாரன்புராவில் ஸ்போர்ட்ஸ் வளாகம் கட்டப்படும். இந்த மூன்றும் எந்த ஒரு விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தக்கூடியதாக இருக்கும். இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் சிட்டியாக இருக்கும் அகமதாபாத்” என்றார் அமித் ஷா.

  இன்று ராம்நாத் கோவிந்து பூமி பூஜை நடத்தினார். அமித் ஷா, கிரண் ரிஜிஜு, குஜராத் துணை முதல்வர் நிதின் படேல், ஆகியோரும் கலந்து கொண்டார்.

  விளையாட்டு அமைச்சர் கிரன் ரிஜிஜு மொதீரா கிரிக்கெட் ஸ்டேடியத்தின் வசதிகள் குறித்து புகழ்ந்து பேசினார்.

  பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும் உள்ளேயுள்ள வசதிகளைப் புகழ்ந்து பேசினார்.

  இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில், கங்குலி, “இன்று ஸ்டேடியத்தில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. பிங்க் பந்து டெஸ்ட் எங்கள் கனவு. 2வது பகலிரவு டெஸ்ட் இங்கு நடைபெறுகிறது” என்று கூறி பிரதமர் மோடியையும் அமித் ஷாவையும் பாராட்டினார்.
  Published by:Muthukumar
  First published: