ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Year Ender 2021: 2021-ல் அதிகம் தேடப்பட்ட ஆளுமைகளில் மோடிக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி

Year Ender 2021: 2021-ல் அதிகம் தேடப்பட்ட ஆளுமைகளில் மோடிக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி

2021-ல் அதிகம் விரும்பித் தேடப்பட்ட ஸ்டார்கள், மோடி-கோலி

2021-ல் அதிகம் விரும்பித் தேடப்பட்ட ஸ்டார்கள், மோடி-கோலி

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

யாஹூ 2021 ஆண்டுக்கான அதிகம் தேடப்பட்ட பெயர்கள் ஆளுமைகளில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்த இடத்தில் அதிகம் தேடப்பட்ட ஆளுமைகள் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இடம்பெற்றுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் அதிகம் விரும்பித் தேடப்பட்ட ஆளுமைகள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார்.

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரராகத் திகழ்பவர் விராட் கோலி. 2021-ல் இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலியைத்தான் அதிகம்பேர் விரும்பித் தேடியுள்ளனர். யாஹூ 2021 அதிகம் தேடப்பட்ட ஆளுமைகள் பட்டியலில் எம்.எஸ்.தோனி மற்றும் தங்க மகன் ஈட்டி எறிதல் ஜாம்பவான், ஒலிம்பிக் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா ஆகியோரும் டாப் 20 இடங்களில் உள்ளனர்.

சமூக ஊடகங்களில் கோலியை பின் தொடரும் பெரிய பட்டாளமே உள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்குப் பிறகு அதிகம் தேடப்பட்ட ஆளுமைகள் பட்டியலில் விராட் கோலி இடம்பெற்றுள்ளார். 2021-ம் ஆண்டு விராட் கோலிக்கு முக்கியமான ஆண்டு, இதில் இரண்டு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். முதலில் டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார், பிறகு ஐபிஎல் அணியான ஆர்சிபி அணி கேப்டன்சியிலிருந்தும் கோலி விலகினார்.

கோலியின் கேப்டன்சியில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி உச்சம் தொட்டது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்றது. ஆனால் சரியாக ஆடமால் நியூசிலாந்திடன் தோற்றது. 2021-ல் கோலி செஞ்சுரி அடிக்கவில்லை. 3 வடிவங்களிலும் 50 ரன்களுக்கும் கூடுதலாக சராசரி வைத்துள்ள ஒரே கிரிக்கெட் வீரர் விராட் கோலிதான்.

சமீபத்தில் கான்பூர் டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை டெஸ்ட் டிரா ஆனது, ஆனால் மும்பைக்கு கேப்டனாக மீண்டும் வந்தார், இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை 1-0 என்று கைப்பற்றியது.

அதே போல் கிரிக்கெட்டில் இன்னொரு பிரபல முகம் தல தோனி அதிகம் தேடப்பட்ட யாஹூ பட்டியலில் 6ம் இடத்தில் உள்ளார். 2021-ல் தல தோனி இன்னொரு ஐபிஎல் டைட்டிலைப் பெற்று தந்தார், கேப்டனாக அபரிமிதமான சாதனைகளுக்கு உரியவர் அதே போல் பல ரசிக உள்ளங்களைக் கொள்ளை கொண்டவரும் தோனிதான். 2021 உலககோப்பை டி20-யில் இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதி நுழையாமல் வெளியேறியது. மெகா ஐபிஎல் ஏலத்துக்கு முன்னால் சிஎஸ்கே அணியில் தோனி தக்கவைக்கப்பட்டுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் வரலாற்றுத் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா , அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் அல்லாத ஆளுமைகள் பிரிவில்  இடம்பெற்றுள்ளார்.

First published:

Tags: PM Narendra Modi, Virat Kohli, Yahoo, YearEnder 2021