• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • 2021 டி20 உலகக்கோப்பை: டாப் 10 பேட்டர்கள், பவுலர்கள் லிஸ்ட்டில் இந்திய வீரர்கள் யாரும் இல்லை

2021 டி20 உலகக்கோப்பை: டாப் 10 பேட்டர்கள், பவுலர்கள் லிஸ்ட்டில் இந்திய வீரர்கள் யாரும் இல்லை

டாப் 10 பவுலர்கள் பேட்டர்கள் லிஸ்ட்

டாப் 10 பவுலர்கள் பேட்டர்கள் லிஸ்ட்

2021 டி20 உலகக்கோப்பையில் என்னென்னமோ பில்ட் அப் கொடுத்து என்னென்னமோ பேசி, எழுதிய பிறகு ஆஸ்திரேலியா உலக சாம்பியன் ஆனது, டி20 உலகக்கோப்பையை நியூசிலாந்தை வீழ்த்தி வென்றது. இதில் டாப் பேட்டராக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் திகழ்கிறார்.

  • Share this:
    2021 டி20 உலகக்கோப்பையில் என்னென்னமோ பில்ட் அப் கொடுத்து என்னென்னமோ பேசி, எழுதிய பிறகு ஆஸ்திரேலியா உலக சாம்பியன் ஆனது, டி20 உலகக்கோப்பையை நியூசிலாந்தை வீழ்த்தி வென்றது. இதில் டாப் பேட்டராக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் திகழ்கிறார்.

    டாப் பவுலராக இலங்கையின் ஹசரங்கா திகழ்கிறார். ஆனால் தொடர் நாயகன் விருது வார்னருக்கு வழங்கப்பட்டுள்ளது, அவர் எடுத்த ரன்கள் 289, பாபர் ஆசம் எடுத்த ரன்கள் 301. ஜாம்ப்பா எடுத்த விக்கெட்டுகள் 13, ஹசரங்கா எடுத்த விக்கெட்டுகல் 16. ட்ரெண்ட் போல்ட்டும் 13 விக்கெட்டுகளுடன் திகழ்கிறார். இதில் இந்திய அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது, கடைசி 3 போட்டிகளில் மட்டுமே சிறப்பாக ஆடி ரன்களைக் குவித்தது, இதனால் டாப் 10 பேட்டர்கள், பவுலர்கள் பட்டியலில் இந்திய வீரர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை.

    டாப் பேட்டர்கள் பட்டியல்:



    அதே போல் டாப் பவுலர்களில் 3ம் இடத்தில் ட்ரெண்ட் போல்ட் 13 விக்கெட்டுகளுடனும், ஜோஷ் ஹேசில்வுட் 4ம் இடத்தில் 11 விக்கெட்டுகளுடனும் ஷாகிப் அல் ஹசன் 11 விக்கெட்டுகளுடன் 5ம் இடத்திலும், மிட்செல் ஸ்டார்க், ஆன்ரிச் நார்ட்யே, டுவைன் பிரிடோரியஸ், ஆதில் ரஷீத், ஷதாப் கான் ஆகிய பவுலர்கள் தலா 9 விக்கெட்டுகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்:



    ஜோஷ் ஹேசில்வுட் தான் இறுதிப் போட்டியில் சிறந்த பவுலர் அவருக்குத்தான் ஆட்ட நாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும், ஆனால் பேட்டர் செண்டராக முடிவெடுக்கப்பட்டு தொடர் நாயகனாக வார்னர், ஆட்ட நாயகனாக மிட்செல் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு பேட்டர், ஒரு பவுலர் கொடுத்திருந்தால் நியாயமாக இருந்திருக்கும்.

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: