#KXIPvDC: ரன் எடுக்காமல் சாதனை படைக்க முடியுமா?

டெல்லி அணியின் பிரித்விஷா, கிறிஸ் மோரிஸ், ஹர்சல் படேல், ரபாடா,  லாமிசேன் ஆகியோர்  ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

news18
Updated: April 2, 2019, 9:34 AM IST
#KXIPvDC: ரன் எடுக்காமல் சாதனை படைக்க முடியுமா?
டெல்லி
news18
Updated: April 2, 2019, 9:34 AM IST
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் 5 பேர்  ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்து சாதனை படைத்துள்ளனர்.

ஐ.பி.எல் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி அணியும் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.  20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் குவித்தது. அந்த அணியின் மில்லர் 43 ரன்கள், சர்ஃபராஜ் கான் 39 ரன்கள், மந்தீப் சிங் 29 ரன்களை எடுத்தனர்.


Loading...



167 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கியது டெல்லி அணி. டெல்லி அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். எனினும் தவான் நிதானமாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 61 ரன்கள் சேர்த்தது.  16.4 ஓவரில் 144 ரன்கள் எடுத்திருந்த போது டெல்லி அணியின் ரிஷப் பண்ட் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் டெல்லி அணி பறிகொடுத்தது. இதனையடுத்து, பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெல்லி அணியில் 5 வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். டெல்லி அணியின் பிரித்விஷா, கிறிஸ் மோரிஸ், ஹர்சல் படேல், ரபாடா, லாமிசேன் ஆகியோர்  ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் ஒரு அணியில் ரன் ஏதும் எடுக்காமல் அதிக வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்தவர்கள் பட்டியலில் டெல்லி அணி இடம்பிடித்துள்ளது.

முன்னதாக 2011-ம் ஆண்டு மும்பை அணியுடனான போட்டியில் இதேபோல் டெல்லி அணி வீரர்கள் 5 பேர் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்திருந்தனர்.

ரன் ஏதும் எடுக்காமல் அதிக  விக்கெட்டை பறிகொடுத்த அணிகளின் பட்டியல் 

ஆண்டு      அணி              விக்கெட்டுகள்      எதிரணி
2011                  கொச்சி                     6                              ஹைதராபாத்
2011                  டெல்லி                       5                             மும்பை
2008                பெங்களூரு          5                              பஞ்சாப்
2019                 டெல்லி                       5                              பஞ்சாப்

தொடர்ந்து 3-வது முறையாக டெஸ்ட் சாம்பியனானது இந்திய அணி


#IPL2019 | சூதாட்ட சர்ச்சையில் ரிஷப் பண்ட்? பிசிசிஐ பதில்!


#CSKvRR | டி-20 வரலாற்றில் இமாலய சாதனை படைத்த சுரேஷ் ரெய்னா!


 

Also watch

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி படுதோல்வி!



சென்னை அணி த்ரில் வெற்றி

First published: April 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...