இங்கிலாந்து அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சன் தனது நிறவெறி, பெண் விரோத ட்வீட்களினால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தடைசெய்யப்பட்டதையடுத்து பல இங்கிலாந்து வீரர்கள் இதே சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
ஒருநாள் இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன், அதிரடி வீரர் ஜாஸ் பட்லரும் நிறவெறி / இனவேறி ட்வீட் செய்ததால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய விசாரணையில் சிக்கியுள்ளனர்.
அதாவது டெலிகிராப் பத்திரிக்கை இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. 2017-18-ல் இந்திய மக்களை கிண்டல் செய்யுமாறு ‘சார்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
மேலும் படிக்க: கேன் வில்லியம்சன் காயம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் ஆடுவாரா?
இயான் மோர்கன் மற்றும் ஜாஸ் பட்லர் இருவரும் தங்களது சமூக ஊடகப்பதிவுகளில் வேண்டுமென்றே இந்திய மக்களின் ஆங்கிலம் பேசும் முறையை கேலி செய்யுமாறு ஒருவகையான உடைந்த ஆங்கிலத்தைப் பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது.
இது தொடர்பான இருவரது உடைந்த ஆங்கில கேலி ட்வீட் மெசேஜ்களின் ஸ்க்ரீன் ஷாட்கள் சமூக ஊடகங்களில் வளைய வந்தன, இதில் “I always reply sir no1 else like me like you like me” என்று ஜாஸ் பட்லர் மெசேஜ் செய்ய அதற்கு இயான் மோர்கன் “Sir, you play very good opening batting” என்று இந்திய ஆங்கிலத்தை கேலி செய்யும் விதமாக வேண்டுமென்றே உடைந்த ஆங்கிலத்தில் உரையாடினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆலி ராபின்சன் சிக்கியவுடன் இத்தகைய உரையாடல்கள் பலவற்றை இருவரும் நீக்கியுள்ளனர். ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சும்மாவிடுவதாக இல்லை விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளது.
இப்படி உடைந்த ஆங்கிலத்தில் மேசேஜ் செய்ய வேண்டிய சூழல் என்னவென்பது தெளிவாக இல்லாவிட்டாலும் இது மிகவும் சீரியசான ஒரு தவறு இதை சும்மா விட முடியாது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறும்போது, சில வீரர்களின் ட்வீட்கள் கவனத்துக்கு வந்துள்ளன. விளையாட்டில் எந்த வித பாகுபாடுகளுக்கும் இடமில்லை. என்று கூறியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.