Home /News /sports /

உலகக் கோப்பை டிக்கெட் விற்பனை ஜோர்! 1 லட்சத்திற்கும் அதிகமான பெண் ரசிகைகள் படையெடுப்பு

உலகக் கோப்பை டிக்கெட் விற்பனை ஜோர்! 1 லட்சத்திற்கும் அதிகமான பெண் ரசிகைகள் படையெடுப்பு

கோப்பு படம்

கோப்பு படம்

இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் போட்டியைக் கண்டுகளிக்க உள்ளதாக கூறி உள்ளார்

  • News18
  • Last Updated :
உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரை கண்டு ரசிக்க 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண் ரசிகைகள் டிக்கெட் வாங்கி உள்ளதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. 10 அணிகள் பங்கேற்க உள்ள இந்த தொடரில் 45 லீக் , 3 நாக் அவுட் உட்பட மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன.

உலகக் கோப்பைத் தெடாரைப் பார்க்க உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள். உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனை இங்கிலாந்தில்  நடைபெற்று வருகிறது. தொடரை நடத்தும் இங்கிலாந்து அணி மோதும் போட்டிகளுக்கு பெரும் அளவிலான டிக்கெட்கள் விற்பனையாகி உள்ளது.

டிக்கெட் விற்பனை குறித்து ஐ.சி.சி உலகக்கோப்பை இயக்குனர் ஸ்டீவ் எல்வொர்த்தி தகவல் தெரிவித்தள்ளார். அதில், ’ஒரு லட்சத்திற்கும் மேலான பெண் ரசிகைகள் டிக்கெட்களை வாங்கி உள்ளனர். இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் போட்டியை கண்டுகளிக்க உள்ளதாக கூறி உள்ளார். உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரை காண இளம் வயதினர் அதிகம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Also Read : டி20 போல் முடிந்த உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்!

Also Read: Fact Check: கனடா சென்ற ஜெயசூர்யா மரணமடைந்தாரா?

Also Read : இங்கிலாந்து புறப்படுகிறார் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின்!

Also Read: இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்களுக்கு இப்படி ஒரு சலுகையா?

Also Watch

Published by:Vijay R
First published:

Tags: ICC Cricket World Cup 2019, ICC world cup, World cup cricket 2019

அடுத்த செய்தி