Home » News » Sports » CRICKET MOHAMMED SIRAJ JOINS LASITH MALINGA IN ELITE LIST MUT

50 ஆண்டுகளில் முதல் இந்திய பவுலர்... உலகிலேயே 4வது... முதல் டெஸ்ட்டிலேயே ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த சிராஜ்

உலக அளவில் ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்ட்டிலேயே 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் 4வது பவுலராக சிராஜ் திகழ்கிறார்.

50 ஆண்டுகளில் முதல் இந்திய பவுலர்... உலகிலேயே 4வது... முதல் டெஸ்ட்டிலேயே ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த சிராஜ்
முகமது சிராஜ் சாதனை.
  • News18 Tamil
  • Last Updated: December 29, 2020, 10:51 AM IST
  • Share this:
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ரஹானேவினால் அபாரமாகப் பயன்படுத்தப்பட்ட அறிமுக வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முதல் டெஸ்ட் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.

ஆஸ்திரேலிய மண்ணில் அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆடும் இந்திய வீரர் ஒருவர் கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார், அதுதான் சிராஜின் சாதனை.

முதல் இன்னிங்சில் உணவு இடைவேளைக்குப் பிறகு 27 ஓவர்கள் கழித்துக் கொண்டு வரப்பட்ட முகமது சிராஜ் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கிடைத்த வாய்ப்பை அற்புதமாகப் பயன்படுத்தி இந்த வெற்றியில் தனது 5 விக்கெட்டுகள் மூலம் பங்களிப்பு செய்துள்ளார்.


மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் சிராஜ் 5/77 என்று அபாரமாக வீசியுள்ளார். இரண்டாவது இன்னிங்சில் இந்தியா திணறிய சமயத்தில் 3 விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தார் சிராஜ்.

உலக அளவில் ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்ட்டிலேயே 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் 4வது பவுலராக சிராஜ் திகழ்கிறார்.

ஹைதராபாத்தை சேர்ந்த சிராஜ் ஆஸ்திரேலியாவில் இருக்கும் போது தன் தந்தையின் மரணத்துக்கும் வர முடியாமல் போனது.இந்நிலையில் கிடைத்த வாய்ப்பை இருகைகளாலும் பற்றிய சிராஜ் முதல் இன்னிங்சில் 3 ரன்களுக்கும் குறைவாகவும், 2வது இன்னிங்சில் 2 ரன்களுக்குக் குறைவாகவும் கொடுத்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் அன்னிய பவுலர்கள் ஆஸ்திரேலியாவில் 5 அல்லது அதற்கும் மேல் வீழ்த்திய விவரம் வருமாறு:

இங்கிலாந்தின் பில் டிஃப்ரெய்டாஸ் 5/95, 1986-87 ஆஷஸ் தொடர்

இங்கிலாந்தின் அலெக்ஸ் டியூடர் 5/108, 1998-1999 தொடர்.

லஷித் மலிங்கா 6/94 - 2004 தொடர்

முகமது சிராஜ், இந்தியா, (5/77), 2020.

இன்று காலை கேமரூன் கிரீன் என்ற பெரிய விக்கெட்டை ஷார்ட் பிட்ச் பந்தில் ஜடேஜா கேட்ச் பிடிக்க வீழ்த்தினார் சிராஜ், பிறகு நேதன் லயனுக்கு ஒரு பவுன்சரை வீசி விக்கெட் கீப்பர் பந்த் கேட்சுக்குக் கைப்பற்றினார்.

அறிமுக டெஸ்ட் போட்டியில் அதுவும் ஆஸ்திரேலியாவில் ஆஸி. பேட்ஸ்மென்களை ரன் எடுக்க விடாமல் முடக்கி அசத்தியுள்ளார் சிராஜ்.
First published: December 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories