Home /News /sports /

இங்கிலாந்தை மிரட்டிய பந்துவீச்சு: பல சாதனைகளை வீழ்த்தி முகமது ஷமி அசத்தல்!

இங்கிலாந்தை மிரட்டிய பந்துவீச்சு: பல சாதனைகளை வீழ்த்தி முகமது ஷமி அசத்தல்!

முகமது ஷமி

முகமது ஷமி

உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய பந்துவீச்சாளர்களில் குறைந்த(10) போட்டிகளில் 30 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

  • News18
  • Last Updated :
இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய முகமது ஷமி, பந்துவீச்சில் பல சாதனைகளை தகர்த்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரின் 38-வது லீக் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கு இங்கிலாந்திற்கு முக்கியமான போட்டி என்பதால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்திற்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய பந்துவீச்சாளர்களில் குறைந்த(10) போட்டிகளில் 30 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரில் 5 விக்கெட்களை வீழ்த்திய 6-வது இந்திய பந்துவீச்சாளர் ஷமி. மேலும் உலகக் கோப்பை தொடரில் 4 விக்கெட்களை தொடர்ந்து 3 முறை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி தான்.

Also Watch

Published by:Vijay R
First published:

Tags: ICC Cricket World Cup 2019, ICC world cup

அடுத்த செய்தி