Home /News /sports /

முகமது ஷமி அணியில் இல்லை என்பது எனக்கு பெரிய அதிர்ச்சி - ரவி சாஸ்திரி

முகமது ஷமி அணியில் இல்லை என்பது எனக்கு பெரிய அதிர்ச்சி - ரவி சாஸ்திரி

இந்தியாவின் ஆசிய கோப்பை அணியில் முகமது ஷமியை முழுமையாக புறக்கணித்ததற்காக ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் தலைமையிலான தற்போதைய இந்திய நிர்வாகத்தை முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சனம் செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India
    இந்தியாவின் ஆசிய கோப்பை அணியில் முகமது ஷமியை முழுமையாக புறக்கணித்ததற்காக ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் தலைமையிலான தற்போதைய இந்திய நிர்வாகத்தை முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சனம் செய்துள்ளார்.

    ஹர்திக் பாண்டியாவை நம்பி மோசம்போய் 3வது சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இல்லாமல் இந்திய அணி செம சாத்து வாங்கி வருவதென்னவோ உண்மை.

    செவ்வாயன்று நடந்த ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பின்னர், இந்தியா வெளியேற்றப்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்ட பிறகு  சாஸ்திரியின் கருத்துக்கள் வெளிவந்தன. இதன் விளைவாக மற்ற அணிகளின் தயவில் இறுதி வாய்ப்பை இந்திய அணி பெற்றுள்ளது.

    இந்நிலையில் ரவி சாஸ்திரி கூறியதாவது: "இந்திய அணி  4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் வந்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. உங்களுக்கு அந்த கூடுதல் பவுலர் தேவை.  முகமது ஷமி போன்ற ஒருவர்  வீட்டில் அமர்ந்திருப்பது என்னைத் திகைக்க வைக்கிறது. ஐபிஎல் போட்டிக்குப் பிறகு அவர் ஆடவில்லை.

    பின்னர் வாசிம் அக்ரம் சாஸ்திரியிடம் கேட்டார்: அணியைத் தேர்ந்தெடுப்பதில் பயிற்சியாளருக்கு செல்வாக்கு உள்ளதா? என்றார் அதற்கு சாஸ்திரி,  "அவருக்கு பங்கு உண்டு. அவர் தேர்வின் ஒரு பகுதியாக இல்லை. ஆனால் அவர் பங்களிக்க முடியும்," சாஸ்திரி மேலும் கூறினார்.

    Read More : இவர்கள் தகுதியற்றவர்களா?: உம்ரன் மாலிக், தினேஷ் கார்த்திக் தேர்வின்மை குறித்து ஹர்பஜன் காட்டம்

    நியூசிலாந்து, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உள்நாட்டுத் தொடரில் ஷமி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கும் அவர் தேர்வு செய்யப்படவில்லை. ஷமி 17 டி20 போட்டிகளில் 31.55 க்கு 18 விக்கெட்டுகளை எடுத்துள்ளார், 2014 இல் மிர்பூரில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாடினார்.
    Published by:Elakiya J
    First published:

    Tags: Asia cup cricket, Cricket, Rahul Dravid, Rohit sharma, T20

    அடுத்த செய்தி