WTC Final : மைதானத்தில் துண்டு கட்டிக்கொண்டு ஃப்ல்டிங் செய்த முகமது ஷமி - வைரல் வீடியோ

முகமது ஷமி

India vs New Zealand | சவுத்தாம்டன் மைதானத்தில் நேற்று குளிர் அதிகமாக இருந்ததால் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாகவே இருந்தது.

  • Share this:
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 5-வது நாள் முகமது ஷமி மைதானத்தில் துண்டுக்கட்டி கொண்டு ஃபல்டிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தாம்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 5-வது நாள் போட்டியில் முகமது ஷமி நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை திணறவிட்டார். இங்கிலாந்து மைதானத்தில் ஷமியின் பவுலிங் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.

    முகமது ஷமி 26 ஓவர்கள் வீசி நியூசிலாந்து அணியின் முக்கியமான 4 விக்கெட்களை வீழ்த்தி அந்த அணிக்கு நெருக்கடி கொடுத்தார். ரோஸ் டெய்லர், பிஜே வாட்லிங், கிராண்ட்ஹோம், ஜேமிசன் ஆகியோரை தனது வேகத்தில் வீழ்த்தினார் ஷமி. இதனால் நியூசிலாந்து அணி ரன்குவிக்க முடியாமல் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டது.

    சவுத்தாம்டன் மைதானத்தில் நேற்று குளிர் அதிகமாக இருந்ததால் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாகவே இருந்தது. இதனிடையே முகமது ஷமி மைதானத்தில் துண்டு உடன் ஃப்ல்டிங் செய்தார். குளிரில் இருந்து உடலை சற்று சூடாக வைத்து கொள்ள ஷமி துண்டு உடன் விளையாடுகிறார் என்று நினைக்கிறோம் என்று வர்ணனையாளர்களும் கருத்து தெரிவித்தனர். ஷமி துண்டு உடன் மைதானத்தில் இருந்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.



    நியூசிலாந்து அணி 249 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதை தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 5-வது நாள் ஆட்ட நேர முடிவில் 64 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்துள்ளது. ரோஹித் சர்மா 30 ரன்னிலும், சுப்மன் கில் 8 ரன்னிலும் சவுதி பந்தில் அவுட்டாகினர்.

    ரிசர்வ் நாளான இன்று போட்டி டிராவில் முடியுமா அல்லது வெற்றியில் முடியுமா என்பது விக்கெட்களை விரைவில் வீழ்த்துவது பொறுத்தே அமையும். இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளதால் இன்றைய போட்டி பரபரப்பாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: