ஷமியுடன் ஆடையின்றி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த மனைவி ஹசின் ஜஹான்.. ட்ரோல் செய்யும் இணையவாசிகள்

ஹசின் சமூக வலைதளங்களில் பகிரும் புகைப்படங்களை பலர் டிரோல் செய்தும், விமர்சித்தும் வருகின்றனர்.

ஷமியுடன் ஆடையின்றி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த மனைவி ஹசின் ஜஹான்.. ட்ரோல் செய்யும் இணையவாசிகள்
  • Share this:
முகமது ஷமி மனைவி ஹசின் ஜஹான் ஆடையின்றி எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ஷமியை சூசகமாக வசைபாடி உள்ளதால் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து முஹமது ஷமி மற்றும் அவரது மனைவி ஹசின் ஜஹான் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து உள்ளனர். முஹமது ஷமி மீது ஹசின் ஜஹான் பாலியல் குற்றச்சாட்டு மற்றும் அவர் சூதாட்டாத்தில் ஈடுபட்டார் என்று பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதையடுத்து பிசிசிஐ முஹமது ஷமியிடம் நடத்திய விசாரணைக்கு பின்னர் அவர் மீது எந்த குற்றமும் இல்லை என்று அறிவித்தது. முஹமது ஷமி - ஹசின் ஜஹான் இருவரும் மாறி மாறி அளித்த புகாரின் அடிப்படையில் இவர்களது வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.


இதனிடையே ஹசின் ஜஹான் மீண்டும் மாடலிங் துறைக்கு திரும்பி உள்ளார். ஷமி உடனான திருமண வாழ்க்கைக்கு பின்னர் மீண்டும் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

ஹசின் சமூக வலைதளங்களில் பகிரும் புகைப்படங்களை பலர் டிரோல் செய்தும், விமர்சித்தும் வருகின்றனர். இதனை சற்றும் கண்டு கொள்ளாத அவர் தொடர்ந்து அதுபோன்ற புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

தற்போது ஷமி உடன் எடுத்த பழைய புகைப்படத்தை இன்ஷ்டாகிராமில் பதிவிட்டு, நீங்கள் ஒன்றுமில்லாத போது நான் தூய்மையாகவும், மதிப்புடையவராக இருந்தேன். தற்போது நீங்கள் ஒரு நிலையில் உள்ளதால் நான் தூய்மையற்றவள். உண்மையை என்றும் மறைக்க முடியாது. முதலை கண்ணீர் நீண்ட நாள் பலிக்காது“ என்று பதிவிட்டுள்ளார்.
ஹசினின் இந்த பதிவிற்கு நெட்டிசன் பலர் தங்களது விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர்.
First published: June 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading