Home /News /sports /

முடிவுக்கு வந்ததா ஷமியின் சர்வதேச டி20 கிரிக்கெட் வாழ்க்கை?

முடிவுக்கு வந்ததா ஷமியின் சர்வதேச டி20 கிரிக்கெட் வாழ்க்கை?

ஷமி

ஷமி

ஷமியின் டி20 உலகக்கோப்பை பவுலிங் தான் அவரது டி20 சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டது என்று ஒரு சில தரப்புகள் தெரிவிக்கின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கடந்த டி20 உலகக்கோப்பையில் ஷமி சரியாக வீசவில்லை அவரது வீச்சினால்தான் இந்தியா தோற்றது என்று ஷமி மீது சமூக ஊடகங்களில் தாறுமாறாக வசை எழுந்த நிலையில் கோலி ஷமிக்கு ஆதரவாக மிகவும் காட்டமான ஒரு அறிக்கையை வெளியிட்டது நினைவிருக்கலாம். இதுதான் விராட் கோலியின் கேப்டன்சியையும் காலி செய்தது என்று ஒருசில தரப்புகள் விமர்சனம் செய்தன. ஆனால் =

    கடந்த 20 ஓவர் உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு அவரின் பந்துவீச்சு காரணமாக இருந்தது. அந்தப் போட்டியில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த முகமது ஷமிக்கு, பிசிசிஐ தேர்வாளர்கள் வாய்ப்புக் கொடுக்கவில்லை. இது குறித்து பிசிசிஐ தேர்வாளர்கள், முகமது ஷமியிடம் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

    20 ஓவர் அணியில் உங்களின் பெயர் பரிசீலிக்கப்படாது என அவரிடம் தெரிவிக்கப்பட்டு விட்டதாக செய்திகள் எழுந்துள்ளன. இது ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்திய அணியில் முகமது ஷிமி தேர்வு செய்யப்படாதது குறித்து பேசும்போது, அவருக்கான வாய்ப்பு இனிமேல் இந்திய அணியில் இருப்பதாக தெரியவில்லை எனக் கூறியுள்ளார். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் இந்திய அணியின் 20 ஓவர் போட்டியில் முக்கிய பந்துவீச்சாளர்களாக இருப்பார்கள் எனக் கூறியிருக்கும் பாண்டிங், ஆசியக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரிவித்துள்ளார்.

    இதுவரை இந்திய அணிக்காக 17 போட்டிகளில் விளையாடியிருக்கும் முகமது ஷமி, 18 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Asia cup cricket, India vs Pakistan, T20

    அடுத்த செய்தி