ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பும்ராவுக்கு பதிலாக டி20 உலககோப்பை அணியில் முகமது ஷமிக்கு இடம்: மேலும் 2 பேக்அப் பிளேயர்கள் ஆஸ்திரேலியா பயணம்

பும்ராவுக்கு பதிலாக டி20 உலககோப்பை அணியில் முகமது ஷமிக்கு இடம்: மேலும் 2 பேக்அப் பிளேயர்கள் ஆஸ்திரேலியா பயணம்

முகமது ஷமி

முகமது ஷமி

முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் (பேக்அப்) பிளேயர்களாக விரைவில் ஆஸ்திரேலியா செல்லவுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

டி20 உலக கோப்பை தொடருக்கு வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுள்ளார்.

16 அணிகள் பங்கேற்கும் 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் கால்பதிக்கும் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை  23-ந்தேதி பாகிஸ்தானுடன் மெல்போர்னில் பலப்பரீட்சை நடத்துகிறது.

இதையடுத்து முன்கூட்டியே பெர்த் நகரில் இந்திய அணி தொடர்ந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய அணியின் முக்கிய பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக விலகினார். இதனால் பும்ராவுக்கு பதிலாக அணியில் யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. முகமது ஷமி அல்லது தீபக் சாஹர் இந்திய அணியில் இடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீபக் சாஹர் காயம் காரணமாக விலகினார். இதையடுத்து வேகபந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என ரசிகர்களும் பல கிரிக்கெட் வல்லுநர்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.

Also Read: மாணவி சத்யாவை கொலை செய்த சதிஷையும் ரயிலில் தள்ளி தண்டிக்க வேண்டும்: விஜய் ஆண்டனி கோரிக்கை

இந்த நிலையில் பும்ராவுக்கு மாற்று வீரராக இந்திய அணியில் முகமது ஷமி தேர்வு செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பயிற்சி ஆட்டங்களுக்கு முன்னதாக ஷமி இந்திய அணியுடன் இணைவுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் (பேக்அப்) பிளேயர்களாக விரைவில் ஆஸ்திரேலியா செல்லவுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

First published:

Tags: BCCI, ICC world cup, Jasprit bumrah