ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்தியாவை வீழ்த்திய பிறகு நான் எங்கு சென்று பொருள் வாங்கினாலும் யாரும் பணம் வாங்குவதில்லை - முகமது ரிஸ்வான்

இந்தியாவை வீழ்த்திய பிறகு நான் எங்கு சென்று பொருள் வாங்கினாலும் யாரும் பணம் வாங்குவதில்லை - முகமது ரிஸ்வான்

விராட் கோலியுடன் முமகது ரிஸ்வான்

விராட் கோலியுடன் முமகது ரிஸ்வான்

2021 உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்திய அணியை தோற்கடித்த பிறகு நான் பாகிஸ்தானில் உள்ள எந்த கடைக்கு சென்று எந்த பொருள் வாங்கினாலும் என்னிடம் யாரும் பணமே வாங்கவில்லை - முகமது ரிஷ்வான்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவை வென்றதால் பாகிஸ்தானில் எங்கும் சென்று பொருள் வாங்கினாலும் என்னிடம் யாரும் பணம் வாங்குவதில்லை என பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேரடி போட்டிகளில் விளையாடுவது இல்லை. இருஅணிகளும் ஐசிசி தொடர்களில் மட்டுமே விளையாடுவதால் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி எப்போழுதும் எதிர்பார்ப்பை எகிற வைக்கும். அதனால் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்பனர்.

இந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் பாகிஸ்தானிடம் இந்தியா அதிர்ச்சி தோல்வியடைந்தது. அதுவும் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தன் அணி வெற்றி பெற்று முதன் முறையாக ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி புதிய வரலாறு படைத்தது. இது குறித்து பேசிய பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் இந்தியாவை வென்றதால் தனக்கு நல்ல மரியாதை கிடைத்ததாக  கூறியுள்ளார்.

இதையும் படிங்க: FIFA World Cup 2022 : உலகக் கோப்பை கால்பந்து : மொராக்கோவை வீழ்த்தி ஃபைனலில் நுழைந்த பிரான்ஸ்

2021 உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்திய அணியை தோற்கடித்த பிறகு நான் பாகிஸ்தானில் உள்ள எந்த கடைக்கு சென்று எந்த பொருள் வாங்கினாலும் என்னிடம் யாரும் பணமே வாங்கவில்லை. உங்களுக்கு எல்லாமே இலவசம்தான் என்று சொன்னார்கள். அப்போழுது தான் பாகிஸ்தான் மக்களுக்கு அந்த வெற்றி எவ்வளவு முக்கியம் என என்னால் அப்போதுதான் உணர முடிந்தது என்று கூறியுள்ளார்.

First published:

Tags: India vs Pakistan, Pakistan Cricketer