பாக். பயிற்சியாளர் கழுத்தில் யூனிஸ்கான் கத்தி வைத்த விவகாரம்... பின்னணியில் அசாரூதின்? பரபரப்பு குற்றச்சாட்டுகள்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் கழுத்தில் யூனிஸ்கான் கத்தியை வைத்தற்கு பின்னணியில் அசாருதீன் கூட இருக்கலாம் என ரஷித் லத்தீப் கூறி உள்ளார்.

பாக். பயிற்சியாளர் கழுத்தில் யூனிஸ்கான் கத்தி வைத்த விவகாரம்... பின்னணியில் அசாரூதின்? பரபரப்பு குற்றச்சாட்டுகள்
யூனிஸ் கான் - அசாரூதின்
  • Share this:
பாகிஸ்தான் அணிக்கு 2014-19 வரை பேட்டிங் பயிற்சியளராக இருந்தவர் ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் கிரான்ட் பிளவர். பாகிஸ்தானில் இருந்த வரை மிகுந்த பயத்துடனே இருந்தேன் என்று கூறி பல அதிர்ச்சி சம்பவங்களை வெளியிட்டவர் கிரான்ட் பளவர். இவர் தற்போது இலங்கை அணியின் பயிற்சியாளராக உள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் யூனிஸ் கான் மீது கிரான்ட் ப்ளவர் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். அதில், “2016-ம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பங்கேற்றோம். அந்த போட்டியில் யூனிஸ் கான் முதல் பந்திலேயே அவுட்டாகினார்.

உணவு இடைவேளையின் போது அவருக்கு பேட்டிங் அட்வைஸ் வழங்க முயன்றேன். ஆனால் எனது அறிவுரையை ஏற்றுக் கொள்ளாத அவர் எனது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார். அப்போது அருகில் இருந்த தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் அவரை சமாதனப்படுத்தினார்.


இந்த சம்பவம் எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. யூனிஸ் கான் டெஸ்ட் போட்டியில் சிறந்த வீரர். அவரது கேரியருக்கு முன்னால் என்னால் நிற்க முடியாது. ஆனால் நான் கொடுத்த அட்வைஸை அவர் மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டார்“ என்று கூறியிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீப் லத்தீப் கூறுகையில், ''யூனிஸ்கான் அப்படி நடந்து கொள்வதற்கு பின்னணியில் அசாருதீன் இருந்திருக்கலாம். 2016-ம் ஆண்டு ஓவல் மைதானத்தில் யூனிஸ்கான் இரட்டை சதம் அடித்தார். அப்போது, பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. மாறாக தான் பேட்டிங் செய்ய கஷ்டப்படும் போது, அசாருதீனுடன் பேசினேன். அவர் சில அறிவுரைகளை எனக்கு வழங்கினார்.

கிராண்ட் பிளவரின் கழுத்தில் யூனிஸ்கான் கத்தியை வைப்பதற்கு அசாருதீன் கூட பின்னணியில் இருக்கலாம் . பேட்டிங் கோச்சாக இருக்கும் ஒருவரை விட மற்றொருவரின் பெயரை குறிப்பிடுவது யோசிக்க வேண்டிய விஷயம்'' என்று கூறி உள்ளார்.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading