இது இப்போது சொன்னதல்ல, 2016ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் கொல்கத்தாவில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் போது ரோஹித் சர்மா, அப்போதைய ஸ்டார் பவுலரான மொகமது ஆமீர் குறித்து சாதாரண பவுலர்தான் என்றார்.
அப்போது மொகமது ஆமீர் மீதான ஒரு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது, அவரது அச்சுறுத்தலும் இருந்தது. அதற்கு எச்சரிக்கும் விதமாக அந்தக் கருத்தை ரோஹித் சர்மா கூறியதாகக் கூறப்படுகிறது.
இன்று அனைத்து வடிவங்களிலும் இந்தியாவின் முழுநேர கேப்டனாக மாறியுள்ள நட்சத்திர இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா அப்போது மொகமட் ஆமீரை, அதற்குள் வாசிம் அக்ரம் போன்றவர்களுடன் ஒப்பிடுவது கூடாது என்று பரிந்துரைத்திருந்தார்.
கொல்கத்தாவில் அந்த போட்டிக்கு முன்பாக ரோஹித் சர்மா கூறியது இதுதான், “அவரைப் பற்றி பேசுவதை நிறுத்துங்கள். அவர் மட்டும் பந்துவீச்சாளர் அல்ல, பாகிஸ்தானில் இன்னும் ஐந்து பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். அவரைச் சுற்றி இவ்வளவு பரபரப்பு உள்ளது, ஒரேயொரு போட்டிக்குப் பிறகு அவருக்கு அதிக விளம்பரம் கொடுப்பது சரியானது என்று நான் நினைக்கவில்லை. அவர் நல்ல வீச்சாளர் ஆனால் அவர் அதை மீண்டும் மீண்டும் நிரூபிக்க வேண்டும். இப்போது மக்கள் அவரை வாசிம் அக்ரமுடன் ஒப்பிடுகிறார்கள். ஆனால் அவர் ஒரு சாதாரண பந்து வீச்சாளர், ஒரு குறிப்பிட்ட தினத்தில் அவர் நன்றாக வீசலாம் அதற்காக அவர் எல்லாரையும் ஊதித் தள்ளும் பவுலர் எல்லாம் இல்லை” என்றார்
இது குறித்து மொகமட் ஆமீர் இப்போது கருத்துக் கூறும்போது, “நான் ரோஹித் சர்மா கூறியதை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை, அவரவர் கருத்து அவரவருக்கு. எல்லோரும் என்னை உலகத் தரமான பவுலராககக் கருத வேண்டும் என்பதல்ல. ஒரு கிரிக்கெட் வீரராக இதையெல்லாம் எதிர்மறையாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
அனைவரின் கவனத்தையும் பாராட்டையும் பெற முடியாது, ஆனால் ரோஹித் சர்மா ஒரு உலகத் தரமான பேட்டர். அவர் என் பந்துகளை எதிர்கொள்ளத் திணறியதையும் பார்த்திருக்கிறேன், ஆனாலும் அவரை நான் உலக தரமான பேட்டர் என்றே அழைக்கிறேன்” என்று தான் காயமடைந்ததை இடக்கரடக்கலாக தெரிவித்தார் மொகமட் ஆமீர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India vs Pakistan, T20 World Cup