முகப்பு /செய்தி /விளையாட்டு / அப்பாஸ் கலக்கல் 10 - ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது பாகிஸ்தான்

அப்பாஸ் கலக்கல் 10 - ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது பாகிஸ்தான்

முகம்மது அப்பாஸ்

முகம்மது அப்பாஸ்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் வென்றது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

அபுதாபியில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி அபுதாபி நகரில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 282 ரன்களும் ஆஸ்திரேலியா 145 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தன. இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 400 ரன்கள் எடுத்து தனது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் அப்பாஸ்

538 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி தனது இன்னிங்சை தொடங்கி விளையாடியது. நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில், பாகிஸ்தான் வீரர் முகம்மது அப்பாஸின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர்.

50 ஓவரில் ஆஸ்திரேலியா 164 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் வென்றது.

ரன் அவுட் ஆன சோகத்தில் அசார் அலி

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மார்னஸ் 43 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்சில் 5 விக்கெட் விழ்த்திய முகம்மது அப்பாஸ், இந்த இன்னிங்சிலும் 5 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம், தனது அதிகபட்ச விக்கெட் சாதனையை பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்:

பந்து பவுண்டரி போன கனவில் இருந்த அசார் அலி ரன் அவுட் - வைரல் வீடியோ

பவுன்சர்கள் போட்டு வம்பிழுத்த சிராஜ்க்கு சிக்சர்களில் பதிலடி கொடுத்த ப்ரித்வி ஷா - வீடியோ

First published:

Tags: Aus vs Pak, Cricket, Mohammad abbas, Test series