• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறார் மொயீன் அலி

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறார் மொயீன் அலி

மொயீன் அலி.

மொயீன் அலி.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி உடனடியாக ஓய்வு அறிவிக்கவுள்ளார். 34 வயதாகும் மொயீன் அலி 64 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார், டெஸ்ட் வடிவத்தில் ஆடும் எண்ணமில்லை என்று தெரிவித்துள்ளார்.

  • Share this:
    வரும் மாதங்களில் வீட்டை விட்டு பிரிந்து நீண்ட காலம் வெளிநாட்டில் இருக்க வேண்டி வரும் என்று நினைக்கும் மொயீன் அலி அது இனிமேல் சாத்தியமில்லை என்று கருதுகிறார். டி20 உலகக்கோப்பையில் ஆட வேண்டும் பிறகு ஆஷஸ் தொடருக்காகச் செல்ல வேண்டும். இப்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எமிரேட்சில் ஆடிவருகிறார் மொயீன் அலி. இந்நிலையில் இங்கிலாந்து பயிற்சியாளர் கிறிஸ் சில்வர் உட், கேப்டன் ஜோ ரூட் ஆகியோரிடம் தன் டெஸ்ட் ஓய்வை விஷயத்தை தெரிவித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

    டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்காக அவர் தொடர்ந்து ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் மொயீன் அலியின் திறமைகளை சந்தேகிப்பவர்களுக்காக ஒரு புள்ளி விவரத்தை தெரிவிக்கிறோம் அவர் 100 விக்கெட் 2000 டெஸ்ட் ரன்களை போத்தம், கேரி சோபர்ஸ், இம்ரான் கான் ஆகிய ஜாம்பவான்களை விட விரைவில் எடுத்தவர். ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்கில் இவர் 3வது சிறந்த ஆல் ரவுண்டராக உள்ளார்.

    இவரது டெஸ்ட் கரியரில் பொன்னான ஆண்டு 2016 அப்போதுதான் 4 டெஸ்ட் சதங்களை எடுத்தார் மொயீன் அலி. நிறைய திறமை இருந்தும் கடைசி டெஸ்ட் சராசரி 28 என்பது இவரது திறமைக்கு நியாயம் செய்ததாகாது. பவுலிங்கிலும் டெஸ்ட் மேட்சில் 2017-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலங்கை, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2018-19-ல் 6 டெஸ்ட்களில் 32 விக்கெட்டுகள் என்று அசத்தியுள்ளார்.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    பேட்டிங்கில் ஓபனிங் முதல் நம்பர் 9 வரை எங்கு வேண்டுமானாலும் மொயீன் அலியை இறக்கலாம். ஏழ்மையான குடும்பப் பின்னணியிலிருந்து வந்த் இங்கிலாந்துக்காக டெஸ்ட் உட்பட அனைத்து வடிவங்களிலும் ஆடிய இவரது கடின உழைப்புக்கு ஒரு சல்யூட்!

    Also Read: மும்பை பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டம்: ஹாட்ரிக் எடுத்த ஹர்ஷல் படேல்- பெங்களூரு அணி அசத்தல் வெற்றி


     Also Read: CSK vs KKR | 19-வது ஓவரில் மாஸ் காட்டிய ஜடேஜா: கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சென்னை அணி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: