• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • வலிமை அப்டேட் கேட்டதை எப்படி மறக்க முடியும்.. சுவாரஸ்யம் பகிரும் மொயின் அலி!

வலிமை அப்டேட் கேட்டதை எப்படி மறக்க முடியும்.. சுவாரஸ்யம் பகிரும் மொயின் அலி!

மொயின் அலி

மொயின் அலி

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்ட அவர்,  தன்னால் இரண்டு நிகழ்வுகளை மறக்க முடியாது என்று கூறினார்.

  • Share this:
    சென்னையில் நடைபெற்ற போட்டியின்போது ரசிகர்கள் தன்னிடம் வலிமை திரைப்படத்தின் அப்டேட் கேட்ட நிகழ்வை மறக்க முடியாத ஒன்று என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியைச் சேர்ந்த மொயின் அலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான மொயின் அலி, இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 5சதம் உட்பட 2,914 ரன்களையும் 195 விக்கெட்களையும் வீழ்த்தி உள்ளார். டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெற்றாலும் குறைந்த ஓவர்கள் போட்டியில் அவர் தொடர்ந்து விளையாடவுள்ளார்.

    ஓய்வு அறிவிப்புக்கு இடையே தனது அனுபவங்கள் குறித்து மொயின் அலி பகிர்ந்துகொண்ட வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த சில மாதங்களாகவே மருத்துவ பாதுகாப்பு வட்டத்திற்குள் இருந்து கிரிக்கெட் விளையாடி வருவதாகவும், ஒரு வட்டத்திற்குள் இருப்பது கடினமாக உள்ளதாகவும் தெரிவித்த அவர்,  அடுத்து டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர் போன்ற கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் நிலை இருக்கிறது. இதனால், குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியவில்லை. மனஅழுத்தமும் அதிகமாகி வருகிறது என்றும் ஓய்வுக்கான காரணம் குறித்து கூறியுள்ளார்.



    வலிமை அப்டேட்:

    சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்ட அவர்,  தன்னால் இரண்டு நிகழ்வுகளை மறக்க முடியாது என்று கூறினார். முதல் நிகழ்வு ரசிகர்களின் அளவற்ற உற்சாகம் என்றும், அடுத்ததாக பவுண்டரி எல்லை அருகே நின்றிகொண்டிருந்தபோது ரசிகர் ஒருவர் தன்னை  அழைத்து வலிமை  அப்டேட்டை கேட்டது என்றும் மொயின் அலி  தெரிவித்தார்.



    இந்த போட்டியில் மொயின் அலியிடம் மட்டுமின்றி தமிழக வீரர் அஸ்வினிடமும் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு  அசரவைத்தனர். தன்னிடம் வலிமை அப்டேட் என்றால் என்ன என்று மொயின் அலி கேட்டதாகவும் அஸ்வின் அப்போது கூறியிருந்தார்.

    இதையும் படிங்க:  பிரிதிவி ஷா அடிச்சஅடி கண் முன்னால வந்து போகுமா இல்லையா?- இன்று வெற்றி பெறுவது டெல்லியா, கொல்கத்தாவா?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: