Home /News /sports /

பயந்து போயிருக்கோமா? யாரு?.. நாங்க? இல்லவே இல்லை- மொயீன் அலி

பயந்து போயிருக்கோமா? யாரு?.. நாங்க? இல்லவே இல்லை- மொயீன் அலி

மொயின் அலி

மொயின் அலி

ஓவலில் அன்று இந்தியாவுக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் தன் 6வது 10 விக்கெட் தோல்வியை பெற்ற இங்கிலாந்து 2011-க்குப் பிறகு முதல்முறையாக 10 விக்கெட்டுகள் தோல்வியை அடைந்தது, ஆனால் தோல்வி எங்களை ஒன்றும் செய்யாது, நாங்கள் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறோம் என்கிறார் மொயீன் அலி.

மேலும் படிக்கவும் ...

    இயோன் மோர்கன் ஓய்வு பெற்று விட்டதால் அவர் இடத்துக்கு மொயீன் அலி வந்துள்ளார். இந்நிலையில் ஓவல் தோல்வி பற்றி மொயீன் அலி கூறும்போது, “பயிற்சியாளர் மேத்யூ மொட் மிகவும் ரிலாக்ஸாக இருக்கிறார். தோல்வி அவரை பாதித்ததாகவே தெரியவில்லை.

    சில தோல்விகள் நல்லதுதான், ஒரு ரியாலிட்டி செக்காக இருக்கும். கடந்த காலங்களில் நிறைய வென்றோம், உலகக்கோப்பையை வென்றோம் பிறகு சில தோல்விகளைச் சந்தித்தோம். இது முன்னேறிச் செல்ல நல்லதுதான். உலகக்கோப்பை வரும் தருணத்தில் மீண்டும் வெற்றி பெறுவோம். எங்களுக்குத் தேவை வெற்றி, ஆனால் அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை.

    சில வேளைகளில் தோற்கும் போட்டிகளிலிருந்துதான் அதிகம் கற்றுக் கொள்ள முடியும்” என்றார் மொயீன் அலி. தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்வோம் என்பது கிளிஷே, எல்லோரும் கூறும் பொய்தான் அதையே மொயீன் அலியும் கூறுகிறார்..

    மேலும் மொயீன் அலி கூறுகையில், “அன்று கஷ்டமாக இருந்தது. ஷாட்களி ஆடப்போனோம், 26 ரன்களுக்கு 5 விக்கெட், இப்படி எல்லா போட்டியிலும் நடக்காது. நார்மலாக நன்றாக ஆடவில்லை எனில் 70/5 என்று வேண்டுமானால் இருக்கலாம். பந்து புதியது, இந்திய பந்து வீச்சு அபாரம், எதிர்த்தாக்குதல்தான் சிறந்தது ஆனால் கடினமானது.

    மேலும் டி20யாக இருந்தாலும் அடுத்தடுத்து போட்டிகளுக்கு பயணிப்பதும் கடினம்தான். இது எல்லா அணிகளுக்குமே கடினம்தான்” என்றார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India Vs England, Moeen ali

    அடுத்த செய்தி