• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • வெற்றியை நோக்கி இந்திய அணியை வழிநடத்திய ’கேப்டன் கூல்’ தோனி - மு.க ஸ்டாலின்

வெற்றியை நோக்கி இந்திய அணியை வழிநடத்திய ’கேப்டன் கூல்’ தோனி - மு.க ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

சர்வதேச கிரிக்கெட்டுக்குப் பிறகான அவரது வாழ்க்கை சிறப்புற அமைய வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார் மு.க ஸ்டாலின்.

  • Share this:
    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக மகேந்திர சிங் தோனி அறிவித்துள்ளார்.  

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் வேதனையைத் தரும் செய்தியாகும்.

    தோனியின் இந்த அறிவிப்பை, இதுகுறித்த கருத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட திமுக தலைவர் மு.க ஸ்டாலின், முன்னாள் திமுக தலைவரும் , முன்னாள் முதல்வருமான கருணாநிதியுடன் தோனி இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து,  “நெருக்கடியான தருணங்களிலும் தளராமல் வெற்றியை நோக்கி இந்திய அணியை வழிநடத்திய 'கேப்டன் கூல்' அவர்!

    கிரிக்கெட் வீரராகவும் இந்திய அணியின் கேப்டனாகவும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. சர்வதேச கிரிக்கெட்டுக்குப் பிறகான அவரது வாழ்க்கை சிறப்புற அமைய வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Gunavathy
    First published: