ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Mithali Raj: புதிய வரலாறு படைத்தார் மிதாலி ராஜ்: ஆடவர், மகளிர் கிரிக்கெட்டின் உச்சபட்ச சாதனை இரண்டும் இந்தியா வசமானது!

Mithali Raj: புதிய வரலாறு படைத்தார் மிதாலி ராஜ்: ஆடவர், மகளிர் கிரிக்கெட்டின் உச்சபட்ச சாதனை இரண்டும் இந்தியா வசமானது!

மிதாலி ராஜ்

மிதாலி ராஜ்

மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனைகள் பட்டியலில் முதல் இடத்தை மிதாலி பிடித்திருப்பதன் மூலம், ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலும் அதிக ரன்கள் அடித்த சாதனை இந்தியா வசமே உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் ஜாம்பவனாக திகழும் மிதாலி ராஜ், மகளிர் கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்து எப்போதும் சிறந்த வீராங்கனயாக மாறியிருக்கிறார். மிதாலி ராஜின் சாதனையை பாராட்டி கிரிக்கெட் ரசிகர்கள் #MithaliTheGOAT என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் எப்படியோ, அதுபோலத்தான் மிதாலி ராஜும். இவரின் பெயரை தான் கடந்த 22 ஆண்டுகளாக மகளிர் கிரிக்கெட் உச்சரித்துக் கொண்டு வருகிறது. வாழ்நாளில் இப்படியொரு சாதனையை படைக்க வேண்டும் என எந்தவொரு வீராங்கனையும் ஆசைப்படும் அந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனையை படைத்திருக்கிறார் மிதாலி ராஜ்.

இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி Worcester மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து நிர்ணயித்த 220 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணிக்கு நங்கூரமாக இருந்து இறுதி வரை போராடி 75 ரன்கள் திரட்டி வெற்றி பெற வைத்திருக்கிறார் நட்சத்திர வீராங்கனை மிதாலி ராஜ்.

Also read:   சுனில் கவாஸ்கரின் உலக சாதனையை முறியடித்த சச்சினுக்கு தங்க கைக்கடிகாரம் பரிசு - சுவாரஸ்ய நினைவலைகள்!

இந்தப் போட்டியின் மூலம் மகளிர் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் அடித்த வீராங்கனை என்ற மிகப்பெரும் உலக சாதனையை மிதாலி ராஜ் படைத்திருக்கிறார். இங்கிலாந்து வீராங்கனை Charlotte Edwards 10,273 ரன்களுடன் நேற்று வரை முதலிடத்தில் இருந்து வந்த நிலையில், அவரின் சாதனையை முறியடித்துள்ளார் மிதாலி ராஜ். அவர் தற்போது 10,337 ரன்களுடன் சர்வதேச அரங்கில் அதிக ரன்கள் எடுத்திருக்கும் வீராங்கனையாக மாறியிருக்கிறார்.

முன்னதாக Charlotte Edwards-க்கு அடுத்ததாக 10,000 ரன்களை கடந்த இரண்டாவது வீராங்கனையாக மிதாலி ராஜ் இருந்து வந்தார்.

1999ம் ஆண்டு தன்னுடைய 16வது வயதில் அயர்லாந்து அணிக்கு எதிராக கிரிக்கெட்டில் அறிமுகமானவர் மிதாலி ராஜ், அதே போட்டியில் அவர் ஆட்டமிழக்காமல் 114 ரன்களை திரட்டியிருந்தார். அவரின் வெற்றி நடை கொஞ்சம் கூட பிசகாமல் தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நேற்றைய போட்டியில் இந்திய அணியின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து அணிக்கு வெற்றி தேடித்தந்து ஆட்டநாயகி விருதையும் வென்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிதாலி ராஜ் தற்போது எப்போதும் சிறந்த வீராங்கனையாக மாறியிருப்பதால் அவரின் ரசிகர்கள் #MithaliTheGOAT என்ற ஹேஷ்டேகை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். GOAT என்றால் Greatest of All Times, அதாவது எப்போதும் தலைசிறந்தவர் என அர்த்தம்.

சச்சின் - மிதாலி

மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனைகள் பட்டியலில் முதல் இடத்தை மிதாலி பிடித்திருப்பதன் மூலம், ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலும் அதிக ரன்கள் அடித்த சாதனை இந்தியா வசமே உள்ளது. ஆடவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Cricket Records, Mithali Raj, Sachin tendulkar, World record