இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் படைத்த சாதனைகள் ஏராளம்.. சச்சினின் சாதனைகள் பல தகர்க்கப்பட்டாலும் இன்றளவும் அவரின் பெயருக்கு கீழ் தகர்க்கப்படாமல் இருக்கும் சாதனைகள் மலை போல் உள்ளன. சச்சின் செய்த சில சாதனைகள் மிகவும் பெரிது. ஒரு நாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் படைத்த இமாலய சாதனை ஒன்றை மகளிர் அணியின் நட்சத்திரமான மிதாலி ராஜ் தகர்க்கவில்லை என்றாலும் அந்த சாதனை பட்டியலில் அவருக்கு அடுத்த இடத்தை பிடிக்க இருக்கிறார்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் நீண்ட காலம் விளையாடிய இந்திய வீரர் என்றால் அது சச்சின் டெண்டுல்கர் தான். மிக இளம் வயதிலேயே கிரிக்கெட்டில் கால்தடம் பதித்த சச்சின் மொத்தம் 22 ஆண்டுகள் மற்றும் 91 நாட்கள் ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார்.
ஒரு நாள் போட்டிகளில் 22 ஆண்டுகளுக்கு மேல் விளையாடிய இந்திய வீரர்களில் சச்சினுக்கு அடுத்த இடத்தை மிதாலி, நாளை (27ம் தேதி) இங்கிலாந்துக்கு எதிராக நடக்க இருக்கும் போட்டியில் பெற இருக்கிறார்.
Also Read: Ind v Eng: இங்கிலாந்து அணியின் பலவீனங்கள்: மைக்கேல் வாகனின் மேட்ச் கணிப்பு!
1999ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி அயர்லாந்துக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமான மிதாலிக்கு தற்போது வயது 38. இவர் ஒரு நாள் போட்டிகளில் நாளை 22ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இந்த 22 ஆண்டுகளில் அவர் 214 போட்டிகளில் விளையாடி, 7 சதம், 55 அரை சதங்களுடன் 7098 ரன்கள் எடுத்துள்ளார். மகளிர் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் 6000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ள ஒரே வீராங்கனை மிதாலி தான். அவர் டி20 போட்டிகளில் 2364 ரன்கள் குவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மிதாலி ராஜ் 22 ஆண்டுகளுக்கு முன் தனது அறிமுக போட்டியிலேயே சதம் எடுத்தவர். அவர் அப்போட்டியில் 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.