சேலையுடன் கிரிக்கெட் விளையாடிய மிதாலி ராஜ் - வைரலாகும் வீடியோ

Mithali Raj | Womens Day | சேலையுடன் கையில் கிளவ், ஷூ என பக்காவாக ரெடியாகி பேட் உடன் தான் விளையாடுவது போன்ற வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

சேலையுடன் கிரிக்கெட் விளையாடிய மிதாலி ராஜ் - வைரலாகும் வீடியோ
மிதாலி ராஜ்
  • Share this:
மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் வீராங்கனையும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மிதாலி ராஜ் சேலையுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இந்திய அணிக்காக 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் வீராங்கனை, 6000 ரன்களை தாண்டிய முதல் கிரிக்கெட்டர் என பல சாதனைகளை படைத்துள்ளார்.

டி20 தொடரில் இருந்து ஓய்வு பெற்ற மிதாலி ராஜ், தற்போது ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், சேலையுடன் தான் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை மிதாலி ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சேலையுடன் கையில் கிளவ், ஷூ என பக்காவாக ரெடியாகி பேட் உடன் தான் விளையாடுவது போன்ற வீடியோவை ஷேர் செய்துள்ளார்.


மகளிர் தின விளம்பரத்திற்கு எடுக்கபப்ட்ட இந்த வீடியோவில், கருத்து பதிவிட்டுள்ள மிதாலி, இந்த மகளிர் தினம் ஒவ்வொருவரும் தங்களது கனவை நோக்கி பயணிக்கும் தருணம் தொடங்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் தான் யார் என்பதை உலகிற்கு வெளிப்படுத்தும் நேரம் வந்துவிட்டது.  தன்னம்பிக்கையுடன் பதிவிட்டுள்ள மிதாலி, பெண்கள் அவர்களுக்கான வாழ்க்கையை வாழ தொடங்கி சாதனைகளை படைக்க வேண்டும் என்றும், உத்வேகத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

மிதாலி ராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாறு ' சபாஸ் மித்து ' என்ற தலைப்பில் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் டாப்ஸி மித்தாலி ராஜ் கேரக்டரில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. நாளை மறுநாள் (மார்ச் 8-ம் தேதி) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படவுள்ளதை ஒட்டி, மிதாலி புடவையுடன் கிரிக்கெட் ஆடி பதிவிட்டுள்ள இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
First published: March 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading