ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் எடுத்த உலகின் 2வது வீராங்கனையானார் மிதாலி ராஜ்!

சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் எடுத்த உலகின் 2வது வீராங்கனையானார் மிதாலி ராஜ்!

மிதாலி ராஜ்

மிதாலி ராஜ்

இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ் 309 போட்டிகளில் 10,273 ரன்கள் எடுத்து கடந்த 2016ம் ஆண்டிலேயே ஓய்வு பெற்றுவிட்டார். மிக விரைவிலேயே அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் வரிசையில் மிதாலி ராஜ் முதலிடத்திற்கு வருவதும் உறுதியாகி உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்த உலகின் 2வது வீராங்கனை என்ற வரலாற்று சிறப்புமிக்க மைல்கல் சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் படைத்தார்.

இந்தியாவில் ஆடவர் கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் என்றால் மகளிர் கிரிக்கெட்டில் மிதாலி ராஜ் எனலாம். சச்சின் டெண்டுல்கர் தனக்கான முத்திரையை பதித்து என்னற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார். அதனைப் போலவே தற்போது மகளிர் கிரிக்கெட்டில் ஜாம்பவனாகியிருக்கிறார் இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ். சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களை எடுத்த இந்தியாவின் முதல் வீராங்கனை ஆகியிருக்கிறார் மிதாலி. டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 என அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து 10,000 ரன்களை மிதாலி கடந்திருக்கிறார்.

லக்னோவில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான 3வது ஒரு நாள் போட்டியில் மிதாலி ரான் இந்த சாதனையை படைத்திருக்கிறார். மிதாலிக்கு முன்னதாக இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ் மட்டுமே மகளிர் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்திருக்கிறார். மிதாலி ராஜ் 311 போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறார்.

இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ் 309 போட்டிகளில் 10,273 ரன்கள் எடுத்து கடந்த 2016ம் ஆண்டிலேயே ஓய்வு பெற்றுவிட்டார். மிக விரைவிலேயே அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் வரிசையில் மிதாலி ராஜ் முதலிடத்திற்கு வருவதும் உறுதியாகி உள்ளது.

முன்னதாக தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான 2வது ஒரு நாள் போட்டியின் போது தாய்நாட்டு அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீராங்கனை ( most capped female international cricketer ) என்ற சிறப்பையும் மிதாலி ராஜ் பெற்றார். 200 ஒரு நாள் போட்டிகளுக்கு மேல் விளையாடிய ஒரே வீராங்கனையாகவும் மிதாலி ராஜ் திகழ்கிறார்.

1999ம் ஆண்டு அயர்லாந்து அணிக்கெதிரான போட்டியில் முதல் முறையாக கிரிக்கெட்டில் அறிமுகமான மிதாலி ராஜ் இதுவரை 10 டெஸ்ட், 211 ஒரு நாள் மற்றும் 82 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ் 23 டெஸ்ட், 191 ஒரு நாள் மற்றும் 95 டி20 என மொத்தம் 309 போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Cricket, Mithali Raj, World record