முகப்பு /செய்தி /விளையாட்டு / இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் திடீர் ஓய்வு அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் திடீர் ஓய்வு அறிவிப்பு

மிதாலி ராஜ்

மிதாலி ராஜ்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய மகளிர் டி20 அணியின் முன்னாள்  கேப்டனான மிதாலி ராஜ்,  அனைத்து சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும்,  ஒருநாள் போட்டியில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மிதாலி ராஜ் தலைமையில் இந்திய அணி 32 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது. மூன்று உலகக் கோப்பை தொடர்களிலும்( 2012 இலங்கை, 2014 வங்கதேசம், 2016 இந்தியா) மிதாலி ராஜ் தலைமையில் இந்திய அணி விளையாடி உள்ளது.

BREAKING: @M_Raj03 announces retirement from T20Is

2021ம் ஆண்டு நடக்க உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் கவனம் செலுத்த உள்ளதால், டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

எனக்கு ஆதரவளித்த பிசிசிஐ நிர்வாகிகளுக்கும் இந்திய அணிக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக சொந்த மைதானத்தில் டி20 போட்டி விளையாட உள்ள இந்திய அணிக்கு வாழ்த்துகளையும் மிதாலி ராஜ் கூறியுள்ளார்.

இந்திய மகளிர் டி20 அணியின் முதல் கேப்டன் மிதாலி ராஜ். மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி 2006ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடியது.

மிதாலி ராஸ் 88 டி20 போட்டிகளில் விளையாடி 2364 ரன்கள் எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் 2000 ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையும் படைத்துள்ளார்.

First published:

Tags: Mithali Raj