மனைவிக்கு ஊக்கமளிக்க பல ஆயிரம் கிலோ மீட்டர் பறந்து வந்த மிட்செல் ஸ்டார்க்... குவியும் பாராட்டுகள்

மிட்செல் ஸ்டார்க் - ஆலிஸா ஹீலி

  • Share this:
ஐசிசி உலகக் கோப்பை இறுதி போட்டியில் விளையாடிய மனைவி ஹீலேவிற்கு ஊக்கமளிக்க தென்னாப்பிரிக்கா தொடரிலிருந்து பாதியில் வந்த மிட்செல் ஸ்டார்க்குக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் மகளிருக்கான டி20 உலகக்கோப்பையின் இறுதி ஆட்டம் நடைபெற்றது.  இந்தப் போட்டியில் அபாராமாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி  85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 5வது முறையாக  கோப்பையை வென்றது.

தென்னாப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய ஆடவர் அணி அந்நாட்டு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட  ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.  இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையே நேற்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை புறக்கணித்துவிட்டு தன் ஆசை மனைவி விளையாடும் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தை பார்ப்பதற்காக ஆஸ்திரேலியா புறப்பட்டார் ஸ்டார்க்.சுமார் பத்தாயிரம் கிலோ மீட்டர் விமானத்தில் பறந்து  மெல்போர்ன் வந்தடைந்த ஸ்டார்க், ஹீலே-யின் ஆட்டத்தை நேரில் கண்டு ரசித்தார். தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஹீலே 39 பந்துகளை எதிர்கொண்டு  75 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகி விருது வென்றதுடன் ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

மகளிர் தினத்தன்று தனது போட்டியை புறக்கணித்துவிட்டு  பல ஆயிரம் கிலோ மீட்டர் பறந்து வந்து மனைவிக்கு ஊக்கமளித்த மிட்செல் ஸ்டார்-க்கின் செயல் சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
Published by:Vijay R
First published: