IPL | காப்பீட்டு நிறுவனத்திடம் ரூ.10 கோடி கேட்டு மிட்செல் ஸ்டார்க் வழக்கு!

#MitchellStarc Sues Insurance Company Over #IPL Contract Payment | 2018 ஐ.பி.எல் தொடர் தொடங்குவதற்கு முன்பே தென் ஆப்ரிக்கா தொடரின்போது ஸ்டார்க்-க்கு காலில் காயம் ஏற்பட்டது.

news18
Updated: April 9, 2019, 6:27 PM IST
IPL | காப்பீட்டு நிறுவனத்திடம் ரூ.10 கோடி கேட்டு மிட்செல் ஸ்டார்க் வழக்கு!
வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். (Images: BCCI)
news18
Updated: April 9, 2019, 6:27 PM IST
ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாட முடியாமல் போனதால் காப்பீட்டு நிறுவனத்திடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு மிட்செல் ஸ்டார்க் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். இவரை கடந்த 2018 ஐ.பி.எல் சீசனில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ரூ.9.4 கோடிக்கு ஏலம் எடுத்தது.

ஆனால், 2018 ஐ.பி.எல் தொடர் தொடங்குவதற்கு முன்பே தென் ஆப்ரிக்கா தொடரின்போது ஸ்டார்க்-க்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால், அந்த டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். அத்துடன். அந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் இருந்தும் அவர் விலகினார்.

Mitchell Starc, IPL
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். (Reuters)


இதற்கிடையே, ஐ.பி.எல் தொடரில் விளையாடும்போது ஏதேனும் காயம் ஏற்பட்டால் அதற்கு இழப்பீடு பெறும் வகையில் ஸ்டார்க் காப்பீடு செய்திருந்தார்.

இதற்காக அவர் பல கோடி ரூபாய் தொகையை பிரிமீயமாக செலுத்தியுள்ளார். அவருடைய மொத்த காப்பீடு தொகை மதிப்பு சுமார் ரூ.10 கோடி ஆகும்.

ஸ்டார்க், ஐ.பி.எல் தொடரில் விளையாட முடியாமல் போனதால், அதற்கு இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்திடம் கேட்டுள்ளார். அதை வழங்க நிறுவனம் மறுத்ததை தொடர்ந்து, தற்போது, இந்த ரூபாயை வழங்க உத்தரவிடும்படி ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியன் கவுண்டி நீதிமன்றத்தில் மிட்செல் ஸ்டார்க் வழக்கு தொடர்ந்துள்ளார்.

VIDEO: மான்கட் அவுட்டில் இருந்து தப்பிக்க வார்னர் செய்த காரியம்... சிரித்த வர்ணனையாளர்கள்!

ரசெலை சமாளிக்க தோனியின் புதிய திட்டம்!

#CSKvKKR | கொல்கத்தாவை சமாளிக்குமா சி.எஸ்.கே?

கொல்கத்தாவை வீழ்த்த அனல் பறக்கும் பயிற்சியில் சி.எஸ்.கே வீரர்கள்!


VIDEO | சகவீரருக்கு மொட்டை அடித்துவிட்ட பிராவோ!

களத்தில் இறங்கிய சி.எஸ்.கே ரசிகர்கள்! பெருமைப்படும் சுரேஷ் ரெய்னா

Also Watch..






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...