ஐபிஎல் தொடரின் 13வது சீசன் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 19ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.
இந்த ஏலத்திற்கு முன் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் 71 வீரர்களை விடுவித்துள்ளது. இவர்களில் 35 பேர் வெளிநாட்டு வீரர்கள். 13வது ஐபிஎல் சீசனில் பங்கேற்க 971 வீரர்கள் விருப்பமும் தெரிவித்துள்ளனர்.
971 வீரர்கள் விருப்பம் தெரிவித்தாலும் வரும் ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் 73 பேரை மட்டுமே தேர்வு செய்ய முடியும். அதிலும் 29 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.
கடந்த ஐபிஎல் சீசனில் உலகக் கோப்பை தொடர் காரணமாக ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரர்களான மேக்ஸ்வெல், ஃபிஞ்ச், ஸ்டார்க் பங்கேற்கமால் இருந்தனர். தற்போது மேக்ஸ்வெல், ஃபிஞ்ச் இருவரும் ஐபிஎல் 13வது சீசனின் ஏலத்தில் பங்கேற்றுள்ளனர். ஆனால் மிட்செல் ஸ்டார்க் விருப்பம் தெரிவிக்காததால் அவர் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஸ்டார்க் பெங்களூரு அணிக்காக விளையாடி வந்தார். கடைசியாக 2015ம் ஆண்டு ஏலத்தில் கொல்கத்தா அணி ஸ்டார்க்கை 9.40 ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. ஆனால் காயம் காரணமாக ஸ்டார்க் அந்த வருட ஐபிஎல் சீசனில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.