ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

நான் நம்பிக்கையுடன் அடிக்கும் ஷாட், இந்தியாவுக்கு எதிராக தவறாகிப் போனதே: மிஸ்பா உல் ஹக் வேதனை

நான் நம்பிக்கையுடன் அடிக்கும் ஷாட், இந்தியாவுக்கு எதிராக தவறாகிப் போனதே: மிஸ்பா உல் ஹக் வேதனை

மிஸ்பா அவுட் ஆகி வெளியேறும் காட்சி.

மிஸ்பா அவுட் ஆகி வெளியேறும் காட்சி.

பாகிஸ்தானின் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக், 2007 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஆடிய அந்த கடைசி ஸ்கூப் ஷாட் தனக்கான நம்பிக்கை தரும் ஷாட் என்று கூறினார், ஆனால் அந்தச் சமயத்தில் சற்றே 'அதிக நம்பிக்கை' கொண்டு ஆடியதால் தவறாகிப் போனது என்று ஒப்புக் கொண்டார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பாகிஸ்தானின் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக், 2007 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஆடிய அந்த கடைசி ஸ்கூப் ஷாட் தனக்கான நம்பிக்கை தரும் ஷாட் என்று கூறினார், ஆனால் அந்தச் சமயத்தில் சற்றே 'அதிக நம்பிக்கை' கொண்டு ஆடியதால் தவறாகிப் போனது என்று ஒப்புக் கொண்டார்.

  தொடக்க T20 WC இன் இறுதி மோதலில் ஸ்ரீசாந்த் ஷார்ட் ஃபைன் லெக்கில் கேட்ச்சைப் பிடித்தபோது, ​​இறுதி ஓவரில் ஜோகிந்தர் ஷர்மாவின் பந்து வீச்சில் மிஸ்பா ஸ்கூப் ஷாட்டை தவறாகப் பயன்படுத்தியது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத தடுணம். இறுதிப் போட்டியில் மிஸ்பா சிறந்த பார்மில் இருந்தார், மேலும் அவர் 43 ரன்களுடன் பேட்டிங் செய்து கொண்டிருந்தார், அவர் இறுதி ஓவரின் மூன்றாவது பந்தில் ஸ்கூப் ஷாட்டை அடிக்க முயன்று ஸ்ரீசாந்த் கேட்சுக்கு அவுட் ஆனது இந்திய முதல் டி20 உலகக்கோப்பை வெற்றி இளம் தலைவர் தோனியின் தலைமையில் சாத்தியமானது.

  14 ஆண்டுகளுக்கு முன்பு, தோனி தலைமையிலான இளம் இந்திய அணியினர் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டனர். கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் முதலில் இந்தியாவின் பக்கம் ஆட்டம் இருந்த நிலையில், மிஸ்பா உல் ஹாக்கின் அதிரடி பேட்டிங்கால் இந்திய அணிக்கு கலக்கம் ஏற்பட்டது.

  ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் பாகிஸ்தானை வெற்றிக்கு அருகில் கொண்டுசென்ற மிஸ்பா, தவறுதலான ஷாட்டின் மூலம் தனது விக்கெட்டை பறிகொடுத்ததால், இந்தியா கோப்பையை வென்றது. அந்த போட்டியில் மிஸ்பா 38 பந்துகளில் 4 சிக்சருடன் 43 ரன்களை எடுத்து ஆட்டமிழந்த தருணம் இந்தியாவே எழுந்து நின்றது.

  இது தொடர்பாக மிஸ்பா உல் ஹக் கூறும்போது, “நான் எனது பேட்டிங்திறனில் அதிக நம்பிக்கை வைத்திருந்தேன். குறிப்பாக ஸ்கூப் ஷாட்டை ஆடுவதில் சிறந்து விளங்கினேன். அந்த தொடர் முழுவதும் இத்தகைய ஷாட்டால், பவுண்டரிகளை எடுத்தேன். அதனாலேயே, நான் அந்த ஷாட்டை ஆட முயற்சித்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக அது ஆட்டமிழந்ததில் முடிந்தது. நான் மிகவும் நம்பிக்கையுடன் அந்த ஷாட்டை தவறாக அடித்துவிட்டேன்.

  ஃபைன் லெக் இருந்தாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்த ஷாட்டை விளையாடும் போது நான் சிங்கிள்ஸ் எடுத்துக்கொண்டிருந்தேன். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக, நான் அந்த ஷாட்டின் மூலம் ஃபைன் லெக்கைக் கடந்து அடித்தேன், ஆனால் இறுதிப்போட்டியில் என்னுடைய நம்பிக்கைக்குகந்த அந்த ஷாட் கைக்கொடுக்காமல் போனது என்றார் மிஸ்பா.

  Published by:Muthukumar
  First published:

  Tags: MS Dhoni, T20 World Cup