Home /News /sports /

சச்சினின் சிட்னி இன்னிங்சைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் - மைக்கேல் வான் அட்வைஸ்

சச்சினின் சிட்னி இன்னிங்சைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் - மைக்கேல் வான் அட்வைஸ்

ஜாக் கிராலி

ஜாக் கிராலி

க்ராலியின் மோசமான ஃபார்ம் பற்றி பேசுகையில், முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான், சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் இன்னிங்சிலிருந்து இருந்து கற்றுக்கொள்ளும்படி அவரை வலியுறுத்தினார்.

    இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜாக் க்ராலியின் பரிதாபமான ஸ்கோர்களுக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. இந்தியாவுக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில், க்ராலி 9 ரன்களில் ஜஸ்பிரித் பும்ராவால் ஆட்டமிழந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 45 இன்னிங்ஸ்களில் விளையாடிய க்ராலி இதோடு 23முறை ஒற்றை இலக்க ஸ்கோரில் ஆட்டமிழந்துள்ளார். க்ராலியின் மோசமான ஃபார்ம் பற்றி பேசுகையில், முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான், சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் இன்னிங்சிலிருந்து இருந்து கற்றுக்கொள்ளும்படி அவரை வலியுறுத்தினார்.

    தி டெலிகிராப்பில் அவர் எழுதிய பத்தில் கூறியிருப்பதாவது:

    2004இல் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவில் ஆடிய போது பந்துகள் தையலில் பட்டு தெறித்தது, அவர் ட்ரைவ் ஆடப்போய் எட்ஜ் ஆகி அவுட் ஆகிக்கொண்டிருந்தார். அவர் இதற்கு என்ன செய்தார்? சிட்னியில் ட்ரைவ் ஆடப்போவதில்லை, அதுவும் ஆஃப் சைடில் ஆடப்போவதில்லை என்று முடிவெடுத்தார். 241 ரன்கள் எடுத்தார். கிராலி இதை முயற்சி செய்ய வேண்டும்.

    பந்து புதிதாக இருக்கும் போது 2 மணி நேரத்துக்கு ட்ரைவே ஆடவில்லை. செய்ததையே திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருந்தால் அவுட் ஆக வேண்டியதுதான் ஏன் தெரியுமா? பவுலர்கள் முட்டாள்கள் அல்லவே.

    கிராலி தனது மோசமான சராசரியில் சர்வதேச கிரிக்கெட் ஆட தகுதியற்றவராக இருக்கிறார். கிராலியை ஒருவர் அதிகமாக ஆதரிக்கும் போது பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன.

    இவ்வாறு கூறுகிறார் மைக்கேல் வான். ஆனால் மைக்கேல் வானுக்கு ஒன்று புரியவில்லை, சச்சின் டெண்டுல்கர் வேறு, ஜாக் கிராலி வேறு என்பதுதான் அது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India Vs England, Sachin tendulkar

    அடுத்த செய்தி