முகப்பு /செய்தி /விளையாட்டு / ’என் பந்தில் அவுட் ஆனவரெல்லாம் பயிற்சியாளராம்’ - வம்பிழுத்த மைக்கேல் வாகனை பங்கம் செய்த வாசிம் ஜாபர்

’என் பந்தில் அவுட் ஆனவரெல்லாம் பயிற்சியாளராம்’ - வம்பிழுத்த மைக்கேல் வாகனை பங்கம் செய்த வாசிம் ஜாபர்

மைக்கேல் வாகன் - வசிம்  ஜாபர்

மைக்கேல் வாகன் - வசிம் ஜாபர்

மைக்கேல் வாகன் பதிவுக்கு என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என்று எதிர்பார்த்த ரசிகர்களை வயிறு குலுக்க சிரிக்க வைத்துள்ளார் வாசிம் ஜாபர்

  • Last Updated :
  • Tamil Nadu, India

பஞ்சாப் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதை கலாய்த்த இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகனை,  வாசிம் ஜாபர் கலாய்த்த பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் டி20 தொடரின் 16-வது சீசனுக்கு அனைத்து அணிகளும் தயார் நிலையில் இருக்கும் நிலையில் இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23-ம் தேதியன்று கொச்சியில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் தொடங்கியதில் இருந்து ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாத அணியாக திகழ்ந்து வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் இம்முறை அணியில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. கேப்டனாக நியமித்த மயங்க் அகர்வால் சுமாராக செயல்பட்டதால் கேப்டன்ஷிப்பில் இருந்து நீக்கியது மட்டுமல்லாமல் அணியிலிருந்தே மொத்தமாக கழற்றி விட்டுள்ளது.

அது மட்டும் இல்லாமல் பயிற்சியாளர்களை மொத்தமாக மாற்றியுள்ளது பஞ்சாப் அணி, புதிய கேப்டனாக சீனியர் வீரர் ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு உறுதுணையாக ஏற்கனவே தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேவுக்கு பதிலாக டிராவிஸ் பெய்லிஸ் புதிய பயிற்சியாளராக நியமித்துள்ளது. மேலும் துணை பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் ப்ராட் ஹார்டின், பந்து வீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சார்ல் லாங்வெல்ட் ஆகியோரை நியமித்துள்ள அந்த அணி பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிம் ஜாபரை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவை வீழ்த்த வெளிநாட்டு அணிகள் செய்யும் ரகசியத்தை போட்டுடைத் ஜான்டி ரோட்ஸ்

வாசிம் ஜாபரை பயிற்சியாளராக அறிவித்த செய்தியை டிவிட்டரில் பதிவிட்ட ஒருவரின் பதிவை ரீ-ட்வீட் செய்துள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கிண்டல் செய்துள்ளார். பகுதிநேர பந்து வீச்சாளர்கள் பட்டியலில் கூட வராத தம்மிடம் அவுட்டான ஒருவர் இன்று பேட்டிங் பயிற்சியாளராக வந்துள்ளதாக மைக்கேல் வாகன் டுவிட்டரில் கிண்டலடித்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரின் ஒரு போட்டியில் வாசிம் ஜாபருடைய விக்கெட்டை மைக்கேல் வாகன் வீழ்த்தியதை வைத்து மைக்கேல் வாகன் இவ்வாறு கிண்டல் செய்துள்ளார்.

எப்போழுதும் வாசிம் ஜாபருக்கும் மைக்கேல் வாகனுக்கும் ஏழாம் பொருத்தம் தான் சமூக வலைதளங்களில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளை மையப்படுத்தி ஒருவரை ஒருவர் இவர்கள் கலாய்த்துக் கிண்டல் செய்து கொள்வது வழக்கமான ஒன்றாகும். இப்படி பஞ்சாப் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஜாபரை மைக்கேல் வாகன் கிண்டல் செய்துள்ள பதிவு வைரலானது.

இந்த நிலையில் மைக்கேல் வாகனுக்கு பங்கமாக கலாய்த்து வாசிம் ஜாபர் பதிவிட்டுள்ளார். ஹாலிவுட் படத்தில் வரும் Hulk எரிச்சலுக்கு மருந்து தருவது போல பதிவிட்டு வாகனை பங்கம் செய்துள்ளார். மீம் கிரீயேட்டர்களை மிஞ்சம் அளவுக்கு ட்ரோல் செய்துள்ள வாசிம் ஜாபரின் பதிவை நெட்டிசன்கள் ஷேர் செய்து சிரித்து வருகின்றனர்.

First published:

Tags: IPL, IPL Auction, Punjab Kings