இந்திய அணியை மழைக் காப்பாற்றியது: மைக்கேல் வான்; ‘இன்னுமாடா இந்த ஊர் நம்மள நம்புது’- ஜோ ரூட் மைண்ட் வாய்ஸ்

கோலி-ரகானே.

நாட்டிங்காமில் மழையால் ட்ராவாக முடிந்த டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் இந்திய அணி இருக்க தோல்வியின் பிடியில் இங்கிலாந்து அணி இருக்க அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், இந்திய அணியை மழைக் காப்பாற்றியதாக ட்வீட் செய்துள்ளார்.

 • Share this:
  நாட்டிங்காமில் மழையால் ட்ராவாக முடிந்த டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் இந்திய அணி இருக்க தோல்வியின் பிடியில் இங்கிலாந்து அணி இருக்க அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், இந்திய அணியை மழைக் காப்பாற்றியதாக ட்வீட் செய்துள்ளார்.

  முதலில் இந்தியாதான் வெற்றி பெறும் நிலையில் உள்ளது என்று கூறிய மைக்கேல் வான் பிறகு மனம்மாறி இப்படி ட்வீட் செய்துள்ளார்.

  முதல் இன்னிங்சில் 95 ரன்கள் முன்னிலை பெற இந்திய அணியின் ஜடேஜா, பும்ரா, ஷமி, சிராஜ் உதவினர். கோலி கோல்டன் டக் அடித்தார், 2வது இன்னிங்சில் ஜோ ரூட் சதமில்லை எனில் அன்றே டெஸ்ட் முடிந்து இந்தியா வென்றிருக்கும்.

  ரூட் சதமெடுத்ததால் இங்கிலாந்து 303 ரன்களை 2வது இன்னிங்சில் எடுத்தது. இதன் மூலம் 209 ரன்களை இந்தியா விரட்ட நேரிட்டது. 52/1 என்று ரோகித்சர்மா, புஜாரா வலுவாகச் சென்று கொண்டிருக்கும் வேளையில் மழையால் இங்கிலாந்து தோல்வியிலிருந்து காப்பாற்றப்பட்டது.

  இந்நிலையில் மைக்கேல் வான் முதலில் கூறும்போது, “இந்தியா டாப்-ல் உள்ளது. அவர்கள்தான் வெற்றி பெற சாதகமான அணி, ஆனால் சொல்ல முடியாது, இந்த இங்கிலாந்தையும் நாம் பார்த்திருக்கிறோம், இந்த இந்திய அணியையும் நாம் பார்த்திருக்கிறோம். ஓரிரு விக்கெட்டுகள் விழுந்தால் இந்திய அணி பதற்றமடைந்து விடும். பிட்ச் இன்னும் உடைந்தால், மேகமூட்டத்துடன் பந்து ஸ்விங் ஆனால் இந்தியாவுக்குக் கடினம்தான்” என்றார்.

  ஆனால் பிறகு மனம் மாறிய மைக்கேல் வான், ‘இந்தியாவை மழை காப்பாற்றியது’ என்று ட்வீட் செய்துள்ளார். ஆனால் ஜோ ரூட் மைண்ட் வாய்ஸ் வின்னர் வடிவேலு போல், ‘இன்னுமாடா இந்த ஊர் நம்மள நம்பிக்கிட்டிருக்கு’ என்று கூறுவது நம் காதில் விழுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதற்கிடையே ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதான போர்டில் இரண்டாம் முறையாக ஜஸ்பிரிட் பும்ரா பெயர் பொறிக்கப்பட்டது. பும்ரா 9 விக்கெட்டுகளை இந்த டெஸ்ட் போட்டியில் வீழ்த்தினார்.
  Published by:Muthukumar
  First published: