முகப்பு /செய்தி /விளையாட்டு / Ind v Eng: இங்கிலாந்து அணியின் பலவீனங்கள்: மைக்கேல் வாகனின் மேட்ச் கணிப்பு!

Ind v Eng: இங்கிலாந்து அணியின் பலவீனங்கள்: மைக்கேல் வாகனின் மேட்ச் கணிப்பு!

 மைக்கேல் வாகன்,

மைக்கேல் வாகன்,

பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ஸ்கோர் செய்வதில்லை. மேலும் பல சொதப்பல்கள் இங்கிலாந்து அணியில் இருப்பதால், இந்தியாவை வீழ்த்துவது நிச்சயம் கடினமானதாக தான் இருக்கும்.

  • Last Updated :

டெஸ்ட் தொடரில் இந்தியாவை வீழ்த்துவது இங்கிலாந்துக்கு கடினமானது என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் பெற்றிருக்கும் நிலையில், அடுத்ததாக இங்கிலாந்து அணியுடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடர் இங்கிலாந்தில் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கி செப்டம்பர் 14 வரை நடைபெற உள்ளது.

இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறும்போது, “உலக டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்துடன் தோல்வியைத் தழுவியிருக்கலாம், அதே அணியுடன் அதற்கு முந்தைய போட்டியில் இங்கிலாந்தும் தோல்வி தான் பெற்றது.

Also Read:   பெண் போலீசை பாலியல் வன்புணர்வு செய்த மாமனார்: கேள்விப்பட்டு முத்தலாக் கொடுத்த போலீஸ் கணவர்!

நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் கிடையாது. பேட்டிங் ஆர்டரும் ஈஸியாக உடைந்துவிடுகிறது. பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ஸ்கோர் செய்வதில்லை. மேலும் பல சொதப்பல்கள் இங்கிலாந்து அணியில் இருப்பதால், இந்தியாவை வீழ்த்துவது நிச்சயம் கடினமானதாக தான் இருக்கும்.

பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், வோக்ஸ் ஆகியோர் அணிக்கு திரும்புகின்றனர் என்றாலும் கூட இங்கிலாந்து அணி வலுவானதாக தோன்றவில்லை. அவர்களின் வருகை இங்கிலாந்து பலம் சேர்க்கலாம், ஆனால் பேட்டிங் ஆர்டரில் மாறுதல் தேவை, வலுவான பந்துவீசும் அணியுடன் மோதி பெரிய ஸ்கோர் எடுப்பது எப்படி என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.

Also Read:   டெல்டா வேரியண்ட் மூளையை பாதிக்கும்: முன்னாள் ஐசிஎம்ஆர் விஞ்ஞானி பகீர் தகவல்!!

இந்தியாவின் வலுவான பந்துவீச்சுக்கு எதிரான வீக்கான இங்கிலாந்து பேட்டிங் ஆர்டர் திணறத்தான் வேண்டும். காயத்தில் இருந்து ஜோஃப்ரா ஆர்சர் இன்னமும் குணமாகாததால் அவரும் அணியில் இடம்பெறுவது சந்தேகமே. இந்த நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்துவது மிகவும் கடினமானது தான்.

இங்கிலாந்து மண்ணில் கடைசியாக ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை 2007-ல் வென்றது. அதன் பின்னர் 2011, 2014 மற்றும் 2018ம் ஆண்டுகளில் இந்தியா வெற்றி பெறவில்லை. தற்போது மீண்டும் இங்கிலாந்து மண்ணில் வெற்றி பெறுவதற்கு இந்திய அணிக்கு சரியான வாய்ப்பு அமைந்திருக்கிறது என்றார் மைக்கேல் வாகன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos

    முன்னதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் மாண்டி பனேசர், இங்கிலாந்து அணியை, இந்தியா 5-0 என்ற கணக்கில் வொயிட் வாஷ் செய்யும் என கூறியது நினைவுகூறத்தக்கது.

    First published:

    Tags: Cricket, England, England test, India Vs England