இந்தியா-லீசெஸ்டர் ஷயர் அணிக்கு எதிராக 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகிறது. இதில் விராட் கோலி தட்டுத்தடுமாறி 33 ரன்களை எடுத்து எல்.பி.முறையில் ஆட்டமிழந்தார்.
அப்போது விராட் கோலி ஆடும்போது ஜோ ரூட் பாணியில் மட்டையை மைதானத்தில் அப்படியே நெட்டுக்குத்தாக நிறுத்துவது போல் தானும் தன் மட்டையை அப்படி நிறுத்த முயன்றார் கோலி, ஆனால் திரும்பத் திரும்ப செய்தும் ஜோ ரூட் போல் கோலியால் முடியவில்லை.
கோலி ஜோ ரூட்டின் மாயாஜால பேட்-பேலன்சிங் வித்தையைப் பின்பற்ற முயன்றார். ENG vs NZ 1வது டெஸ்டின் போது, ஜோ ரூட் தனது மட்டையை எந்த ஆதரவும் இல்லாமல் செங்குத்தாக நிற்க வைத்தார், இது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
Virat not in the same Bat balancing league as Joe 😜😜 https://t.co/CJSvpPVB0W
— Michael Vaughan (@MichaelVaughan) June 23, 2022
இதை வர்ணித்து இங்கிலாந்தின் ரிட்டையர்டு கேப்டன் மைக்கேல் வான் தன் ட்விட்டர் பக்கத்தில், “விராட் கோலிக்கு ஜோ ரூட் போல் பேட் பேலன்ஸ் செய்ய வரவில்லை, அந்த லீகில் கோலி இல்லை” என்ற அர்த்தத்தில் ட்வீட் செய்திருந்தார்.
ஆனால் இதன் குறியீட்டு அர்த்தம் ஜோ ரூட் அளவுக்கு விராட் கோலி பேட்டிங் இப்போது இல்லை,அல்லது ஜோ ரூட் பேட்டிங் லீகில் அந்த வரிசையில் கோலி இல்லை என்பதைத்தான் இப்படி கூறுகிறாரோ என்று நெட்டிசன்கள் ஐயம் எழுப்பியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India Vs England, Joe Root, Virat Kohli